குமரி: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று முன்தினம் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, திங்கள்நகர், குளச்சல் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. விருதுநகர், தேனி மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடியில் கயத்தாறு, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, திருவில்லிப்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததாக தமிழக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

