நீதிபதி ரமணா: மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்

நீதிபதி ரமணா: மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்

2 mins read
0c136631-0c89-4134-9e53-ab671a906e92
-

'நீதிமன்றத்தில் மாநில மொழிகளைப் பயன்படுத்துவது குறித்து விரைவில் தீர்வு'

சென்னை: மொழி, அடை­யா­ளம் ஆகி­ய­வற்­றால் பெரு­மை­மிக்க தமி­ழர்­கள், மொழிக்­காக எப்­போ­தும் முத­லா­வ­தாக வரு­வார்­கள் என்று உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­பதி ரமணா தெரி­வித்­துள்­ளார்.

நீதி­மன்ற விசா­ர­ணை­களில் மாநில மொழி­களை பயன்­ப­டுத்து­வதில் சில சிக்­கல்­கள் உள்ள போதும், தற்­போ­தைய தொழில்­நுட்ப வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்தி, உயர் நீதி­மன்­றங்­களில் மாநில மொழி­களில் வழக்­கா­டு­வது குறித்து விரை­வில் தீர்வு காணப்­படும் என்று நிகழ்ச்சி ஒன்­றில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

"ஆக்­க­பூர்­வ­மான தீர்­வு­கள் காணும்­போது நீதி­ப­தி­கள் கண்­மூடி சட்­டத்தை மட்­டும் சார்ந்திருக்க முடி­யாது. சமூக உண்­மையை உணர வேண்­டும். உட­னடி காப்பி, உட­னடி நூடுல்ஸ் போல உட­னடி நீதி­யை­யும் சில தரப்­பி­னர் எதிர்­பார்க்­கின்­ற­னர். அது நீதியை கொன்று விடு­கிறது," என்­றார் தலைமை நீதி­பதி ரமணா.

உச்ச நீதி­மன்­றக் கிளையைத் துவங்­கு­வது குறித்து திமுக உறுப்­பி­னர் மாநி­லங்­க­ள­வை­யில் தனி­நபர் மசோதா அறி­மு­கம் செய்­துள்­ள­தைச் சுட்­டிக்­காட்­டிய அவர், அதன் மீது மத்­திய அரசு என்ன முடிவு எடுக்­கப்­போ­கிறது என்­பது தமக்­குத் தெரி­யாது என்­றார்.

"உச்ச நீதி­மன்­றத்தை வழக்­க­றி­ஞர்­கள் எளி­தில் அணுக ஏது­வாக காணொளி வசதி மூலம் வழக்­கு­களை தொடர்ந்து விசா­ரிப்­பது என மற்ற நீதி­ப­தி­க­ளு­டன் கலந்து பேசி முடி­வெ­டுத்­துள்­ளோம்," என்­றார் நீதி­பதி ரமணா.

தமி­ழ­கத்­தில் நீதித்­துறை உள்­கட்­ட­மைப்­புக்கு தேவை­யான நட­வடிக்­கை­களை மாநில அரசு சிறப்­பாக மேற்­கொண்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், இதற்­காக முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னுக்­குப் பாரா­ட்டு தெரி­வித்­தார். மேலும், வழக்­க­றி­ஞர் நல­னுக்­கா­க­வும் தமி­ழக அரசு பாடு­ப­டு­வ­தா­க­வும் நீதித்­துறை மேம்­பாட்­டில் முதல்­வர் ஸ்டா­லின் அக்­கறை கொண்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்த நிகழ்ச்­சி­யில் பேசிய உச்ச நீதி­மன்ற நீதி­பதி எம்.எம்.சுந்­த­ரேஷ், தமிழ் நிலம்­தான் ஏரா­ள­மான தெலுங்கு நீதி­ப­தி­களை உரு­வாக்கி உள்­ளது என்­றார்.

"தமி­ழ­கத்­தில் நீதித்­துறை செயல்­பாடு என்­பது முன்­ன­ணி­யில் உள்­ளது. இங்கு எண்­ணிக்கை அள­வில் ஏரா­ள­மான வழக்­கு­கள் முடித்து வைக்­கப்­பட்­டுள்­ளன.

"குறிப்­பாக கீழமை நீதி­மன்­றங்­களில் உள்ள வழக்­கு­களில் 90 விழுக்­காடு வழக்­கு­கள் முடித்து வைக்­கப்­பட்­டுள்­ளன," என்­றார் நீதி­பதி சுந்­த­ரேஷ்.