கனிமொழி: மத்திய அரசு எதையுமே தருவது இல்லை

கனிமொழி: மத்திய அரசு எதையுமே தருவது இல்லை

1 mins read
092ad41c-aa05-4026-b0d5-b2c2125175e7
-

நாகர்­கோ­வில்: தமி­ழ­கத்­துக்கு வழங்­கப்­பட வேண்­டிய ஜிஎஸ்டி வரித்­தொ­கையை மத்­திய அரசு இன்­னும் வழங்­க­வில்லை என்று திமுக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கனி­மொழி தெரி­வித்­துள்­ளார்.

மேலும், ஒவ்­வொரு முறை­யும் இயற்கைப் பேரி­டர் ஏற்­ப­டும்­போது தமி­ழ­கத்­துக்கு வழங்­கப்­பட வேண்­டிய தொகையை மத்­திய அரசு வழங்­கு­வது இல்லை என்­றும் நாகர்­கோ­வி­லில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

ஒட்­டு­மொத்­தத்­தில் சொல்­வ­தானால் தமி­ழ­கத்­துக்கு வந்து சேர வேண்­டிய எதை­யுமே மத்­திய அரசு அளிப்­ப­தில்லை என்று கனி­மொழி சாடி­னார்.

தமி­ழக நல­னுக்கு எதி­ரா­னது என்று கரு­து­வ­தால் ஹைட்ரோ கார்­பன் திட்­டத்தை திமுக எதிர்த்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், இந்த நிலைப்­பாட்­டில் இது­வரை எந்த மாறு­பா­டும் இல்லை என்­றார்.

"மூவ­லூர் ராமா­மிர்­தம் அம்மை யார் திரு­மண உத­வித்­திட்­டம் இப்­போது பெண்­க­ளுக்­கான கல்வி உத­வித்­திட்­ட­மாக மாற்றி அமைக்­கப்­பட்­டுள்­ளது.

"இது நிச்­ச­ய­மாக பெண்­க­ளுக்கு எதி­ரான திட்­டம் அல்ல. இது பெண்­களை முன்­னேற்றுவதற்கான நல்ல திட்­டம்.

"உயர்­கல்­விக்­குச் செல்­லும் பெண்­க­ளுக்கு பணம் ஒரு தடை­யாக இருக்­கக்­கூ­டாது என்­ப­தற்காக இந்த திட்­டம் மாற்­றப்­பட்­டுள்ளது.

"இது பெண்­க­ளுக்கு எதி­ரா­னது என்று தவ­றான, பிற்­போக்­கான கருத்­து­களை பரப்­பிக்­கொண்டு வரு­கி­றார்­கள்," என்­று கனிமொழி மேலும் கூறினார்.