இலங்கைக்கு கடல்வழி மின் பாதை அமைக்க எதிர்ப்பு

இலங்கைக்கு கடல்வழி மின் பாதை அமைக்க எதிர்ப்பு

1 mins read
bd37e52b-8027-4579-87a4-29724f0d08e7
-

சென்னை: இந்­தியா, இலங்கை இடையே கடல்­வழி மின்­பாதை அமைக்­கும் திட்­டத்­தைக் கைவிட வேண்­டும் என பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், இலங்­கைக்கு செய்­யப்­படும் உத­வி­கள் ஒருபோதும் இந்­தி­யா­வுக்கு எதி­ராக அமைந்து விடக்கூடாது என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மின்­பாதை அமைக்­கும் திட்டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டால் அது இந்­தி­யா­வின் வளர்ச்­சியை பாதிக்­கும் என்­பதை அரசு உணர வேண்­டும் என்­றும் கடந்த 20 ஆண்­டு­களில் இரு­முறை கைவி­டப்­பட்ட இந்­தியா - இலங்கை மின்­பாதை திட்­டத்தை மீண்­டும் செயல்­ப­டுத்த முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வது தேவை­யற்ற நட­வ­டிக்கை என்­றும் ராமதாஸ் தெரி­வித்­துள்­ளார்.

"இந்­தி­யா­வில் உற்­பத்தி செய்­யப்­படும் மின்­சா­ரத்தை இலங்­கைக்கு கொண்டு செல்­வ­தற்கு வச­தி­யாக மது­ரை­யி­ல் இ­ருந்து இலங்கை­யின் அனு­ரா­த­பு­ரம் பகுதிக்கு கடல் வழி­யாக மின்­பாதை அமைக்­கும் திட்­டம் நீண்ட கால­மாக இரு நாடு­க­ளின் பரி­சீ­ல­னை­யில் இருந்து வரு­கிறது.

"தமி­ழ­கத்­தில் கடு­மை­யான எதிர்ப்பு எழுந்­த­தால் அத்­திட்­டம் கைவி­டப்­பட்­டது. இந்த முயற்சி பொது­வாக இந்­திய நல­னுக்­கும், குறிப்­பாக தமி­ழ­கத்­தின் வளர்ச்சிக்­கும் பாத­க­மாக அமை­யும் என்­பதே உண்மை," என்று ராம­தாஸ் தமது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.

மீண்டும் பழைய திட்டத்தைப் பரிசீலிக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.