'தமிழகத்தில் கொரோனா புது வகை பாதிப்பு இல்லை'

'தமிழகத்தில் கொரோனா புது வகை பாதிப்பு இல்லை'

1 mins read
d51cff69-7b6b-464b-b259-17cdee356118
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோ­னா­வின் 'எக்ஸ்-இ' வகை பாதிப்பு இன்­னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்­று தமி­ழக சுகா­தா­ரத்­துறை செய­லாளர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தப் புதிய பாதிப்பு குறித்து பொது­மக்­கள் பீதியடையத் தேவை­இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

"மக்­கள் அதி­கம் கூடும் இடங்­களில் சுகா­தா­ரத்­துறை கூடு­தல் கவ­னம் செலுத்த உத்­த­ர­வி­டப்­பட்டுள்­ளது. கொரோ­னா­வின் முதல் இரண்டு அலை­க­ளின்­போது ஏற்­பட்ட பாதிப்­பு­களை நாம் நினை­வில் வைத்­தி­ருக்க வேண்­டும்," என்­றார் அவர்.

இந்­நி­லை­யில், கிரு­மித்­தொற்­றால் லேசாக பாதிக்­கப்­பட்­டுள்ள நோயா­ளி­க­ளுக்கு இண்­டோ­மெ­த­சின் மருந்து மூலம் சிகிச்சை அளிப்­பது நல்ல பலனை அளித்­துள்­ள­தாக ஐஐடி நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­காக கடந்த மூன்று மாதங்­க­ளாக 210 கொரோனா நோயா­ளி­களை பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக அவர்­கள் கூறி­னர். 107 நோயா­ளி­க­ளுக்கு பாரா­சிட்­ட­மல் மருந்து மூல­மும் 103 பேருக்கு இண்­டோ­மெ­த­சின் மருந்து மூல­மும் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

ஆய்­வின் முடி­வில் பாரா­சிட்­ட­மல் மூலம் சிகிச்சை பெற்­ற­வர்­கள் குண­ம­டைய ஏழு நாள்­கள் தேவைப்­படும் நிலை­யில் இண்­டோ­மெ­த­சின் மூலம் சிகிச்சை பெறக்­கூ­டிய நோயா­ளி­கள் குண­மடைய நான்கு நாள்­கள் மட்­டுமே தேவைப்­ப­டு­வ­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.