ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் மீண்டும் விண்ணப்பம்
சென்னை: நாகையை உள்ளடக்கிய தமிழகம், புதுவை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மீண்டும் அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் விவசாயிகளுக்கு சாதகமான முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் என டெல்டா பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருச்செந்தூர் கோவிலில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கி உள்ளது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொளி வசதி மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் அக்கோவிலில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, புட்டமுது, எலுமிச்சை சாதம், வெண்பொங்கல் ஆகிய ஐந்து பிரசாதங்கள் சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தை வரவேற்பதாக பிரசாதம் பெற்றுக்கொண்ட பக்தர்கள் பலரும் தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழகத்தில் மேலும் பல கோவில்களுக்கு இந்த இலவச பிரசாரம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

