ரூ.28 லட்சம் லஞ்சப் பணத்துடன் சிக்கிய காவல் ஆணையர்

கோவை: ஈரோடு, திருப்­பூர், நீல­கிரி, கோவை ஆகிய நான்கு மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய கோவை மண்­டல வட்­டார போக்­கு­வ­ரத்து இணை ஆணை­ய­ராக உள்­ளார் உமா­சக்தி. இவர் இம்­மா­வட்­டங்­க­ளைச் சேர்ந்த பேருந்து உரி­மை­யா­ளர்­கள், சுங்­கச்­சா­வடி அதி­கா­ரி­கள் உட்­பட பல­ரி­டம் மாதந்­தோ­றும் லஞ்­சம் வசூ­லித்து வந்­துள்­ளார்.

இது­கு­றித்து கோவை காவல்­துறை­யின் லஞ்ச ஒழிப்புப் பிரி­வுக்கு தொடர் புகார்­கள் வந்­தன. இதை­ய­டுத்து அவர் மீது நட­வ­டிக்கை எடுக்க முடி­வா­னது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் காலை வழக்­கம்­போல் மாதாந்­திர லஞ்­சப் பணத்தை வசூ­லித்த இணை ஆணை­யர் உமா­சக்தி, கோவை சவு­ரி­பா­ளை­யம் பகு­தி­யில் தன் காரில் சென்றுகொண்­டி­ருப்­ப­தாக லஞ்ச ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து அங்கு விரைந்து சென்ற அதி­கா­ரி­கள், காரை தடுத்து நிறுத்தி, சோதனை மேற்­கொண்­ட­னர். இத­னால் உமா­சக்தி கடும் அதிர்ச்சி அடைந்­தார்.

சோத­னை­யின்­போது காரில் கட்­டுக்­கட்­டாக அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த லஞ்­சப் பணத்தை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்து, உமா­சக்­தி­யை­யும் அவ­ருக்கு உத­வி­க­ர­மாக செயல்­பட்ட ஓய்­வு­பெற்ற காவ­லர் செல்­வ­ராஜ் என்­ப­வ­ரை­யும் கைது செய்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!