விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

1 mins read
3c905e4e-1281-4170-9d72-d5c2a71dd960
-

பெரம்­ப­லூர்: பெரம்­ப­லூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்­சா­லை­யில் நேற்று அதி­கா­லை­யில் நிகழ்ந்த விபத்­தில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த நால்­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர்.

சீர்­கா­ழி­யைச் சேர்ந்த முனியப்­பன், கரூ­ரில் தங்கி 'பைனான்ஸ்' தொழில் செய்­து­வந்­த­தாகக் கூறப்­படுகிறது.

இந்­நி­லை­யில், முனி­யப்­பன் அவ­ரது மனைவி கலை­வாணி, தாய் பழ­னி­யம்­மாள், மகள் ஹரிணி, மகன் கார்­மு­கில் ஆகிய ஐவரும் காரில் கரூ­ரி­லி­ருந்து சொந்த ஊரான சீர்­காழிக்குச் சென்­ற­னர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்­சா­லை­யில், பெரம்­ப­லூர் மாவட்­டம், திரு­மாந்­துறை அருகே இவர்களது கார், முன்­னாள் சென்ற ஈச்­சர் வாகனத்­தின் மீது மோதி நின்­றது. அப்­போது, பின்­னால் வந்த லாரி கார் மீது மோதி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து, கார் முன்­னால் நின்ற ஈச்­சர் வாக னம் அடி­யில் சிக்­கிக்­கொண்­டது.

இவ்­வி­பத்­தில் முனி­யப்­பன், அவ­ரது மனைவி, தாய், மகள் என நால்­வ­ரும் பலி­யா­கி­னர்.

5 வயது மகன் கார்­மு­கில் பலத்த காய­ம­டைந்­தார். அரு­கி­லி­ருந்­த­வர்­கள் சிறு­வன் கார்­மு­கிலை மீட்டு பெரம்­ப­லூர் மாவட்ட அரசு தலைமை மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர்.

மங்­க­ள­மேடு காவல்­து­றை­யி­னர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வரு­கின்­ற­னர்.