சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா தினம்

சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா தினம்

1 mins read
866ebe31-c0df-43a6-945e-b43d762e4368
-

நிழல்கள் வருடத்திற்கு இரண்டு நாள்களில் சில மணித்துளிகள் நம்மைப் பின்தொடராது. அந்த நாளைத் தான் 'நிழல் இல்லாத தினம்' என்கிறோம். இந்த அறிவியல் நிகழ்வை கடந்த ஞாயிறன்று சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் மாணவர்கள் மனிதச் சங்கிலியை உருவாக்கி நிழல் விழுகிறதா என கண்காணிக்கின்றனர். நண்பகலில் மிகச்சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். அதாவது, செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்துவிடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது. அந்த நாளைத்தான் 'நிழலில்லாத நாள்' என்கிறோம். படம்: இபிஏ