சென்னை: தீயணைப்புத் துறை யினருக்கு உதவும் வகையில் 'ட்ரோன்கள்' எனப்படும் 50 ஆளில்லா வான்கலங்களை இன்னும் 15 நாள்களில் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது தமிழக தீயணைப்புத் துறை.
தீயணைப்பு, மீட்புப் பணிகளில் துரிதகதியில் செயல்படவும் முழுத் திறனுடன் பிரச்சினைகளைக் கையாளவும் தமிழக தீயணைப்புத் துறையினர் இந்த ஆளில்லா விண்கலத்தைப் பயன்படுத்த முடிெவடுத்துள்ளனர்.
இதற்காக, தமிழ்நாடு ஆளில்லா விமான நிறுவனத்திடமிருந்து ரூ.1 கோடி செலவில் 50 வான்கலங்களைத் தீயணைப்புத்துறை வாங்கஉள்ளது.
இந்த வான்கலங்கள் மூலம் தீ வேகமாகப் பரவுவது தடுக்கப்படுவ துடன் விரைவாகவும் அணைக்கப் பட்டுவிடும். அதோடு மனித உயிரிழப்புகளையும் சேதத்தையும் பெருமளவு குறைக்கமுடியும் என தீயணைப்புத் துறையினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
இந்த வான்கலங்கள் மூலம் தீ விபத்து சமயங்களில் எந்த இடத்தில் மனிதா்கள் சிக்கியுள்ளனா், அவா்களை எந்த வழியில் மீட்க முடியும், தீயின் தாக்கம் எந்தப் பகுதியில் அதிகமாக உள்ளது, தீ எந்த திசையை நோக்கி வேகமாகப் பரவுகிறது உள்ளிட்ட விவரங்களை உடனே கண்டறிந்து அதற்கான உடனடி தீர்வு காண முடியும் என தமிழக தீயணைப்புத் துறையைச் சோ்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தாா்.
இந்த வான்கலங்களைக் கையாளும் முறை குறித்து தீயணைப்புத் துறை வீரா்களுக்கு தமிழ்நாடு ஆளில்லாத விமானக் கழக வல்லுநா்கள் வரும் மே மாதம் முதல் பயிற்சி அளிக்கவுள்ளனா்.
இதுதொடா்பாக அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பேராசிரியா் கே.செந்தில்குமாா் கூறுகையில், "தீயணைப்புத் துறைக்கு 50 ஆளில்லா வான் கலங்கள் இன்னும் 15 நாள்களில் வழங்கப்பட்டுவிடும். இதன்மூலம் மனிதா்கள் செல்லமுடியாத தீ விபத்து பகுதிகள், புகை மூட்டம் அதிகமுள்ள பகுதிகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், மலைப் பகுதிகளில் தீயணைப்புத் துறை விரைந்து செயல்பட முடியும்.
"ஒரு கிலோ 200 கிராம் எடைகொண்ட இந்த வான்கலங்களால் 30 நிமிடங்களுக்குத் தொடர்ந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கமுடியும். இந்த வான்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் 'எச்.டி. 4 எக்ஸ் ஜூம்' கண்காணிப்புக் கேமரா மூலம் துல்லியமாக காட்சி களைப் பதிவு செய்யவும் துரித மாக மீட்புப் பணியில் ஈடுபடவும் முடியும்," என்றாா் அவா்.
தமிழகத்தில் கடந்தாண்டு 16,809 தீவிபத்துச் சம்பவங்கள் ஏற்பட்டன. இந்த விபத்துகளில் சிக்கி 82 போ் உயிரிழந்து உள்ளனா். 182 போ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டுள்ளனா்.

