புதுக்கோட்டை: தமிழகத்தில் பலரும் மறந்து போயிருந்த பனை ஓலை விசிறி மீண்டும் மக்கள் கைகளில் தவழத் தொடங்கி உள்ளது.
கோடை வெய்யில் சுட்ெடரிக்கும் இந்தக் காலத்தில் மின்வெட்டும் அவ்வப்போது ஏற்படுவதால், கோடை வெப்பம், இரவுப் புழுக்கத்தைச் சமாளிக்க மக்களின் பார்வை இந்த விசிறியின் பக்கம் திரும்பியுள்ளது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ''புதுக்கோட்டை மாவட்டம், பேரையூர் பகுதியில் பனை ஓலையில் விசிறி தயாரிக்கும் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து பல இடங்களுக்கும் விசிறிகள் ஏற்றுமதி செய்யப்படு கின்றன.
"கடைகளிலும் சந்தைகளிலும் இந்த பனை ஓலை விசிறி விற்பனை தற்போது மும்முரமடைந்துள்ளது. ஒரு பனை ஓலை விசிறி ரூ.10 முதல் ரூ.15 வரைக்கும் விற்பனையாகிறது. இதேபோல் பிளாஸ்டிக் விசிறிகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது,'' என்றார்.

