ஓடும் விமானத்தில் புகை பிடித்த பயணி கைது

ஓடும் விமானத்தில் புகை பிடித்த பயணி கைது

1 mins read
9be43c4a-50cb-49ab-acbc-11b25356ecca
-

மீனம்­பாக்­கம்: குவைத்­தில் இருந்து சென்னை வந்த விமா­னம் நடு­வா­னில் பறந்துகொண்­டி­ருந்­த­போது புகை பிடித்து ரகளையில் ஈடுபட்ட தஞ்­சா­வூர் பயணி சென்னை விமான நிலைய காவல்துறையில் ஒப்­படைக்­கப்­பட்­டார்.

குவைத்­தில் இருந்து இண்­டிகோ ஏர்­லைன்ஸ் விமானம் 164 பய­ணி­களுடன் நேற்று முன்­தி­னம் சென்­னைக்கு வந்­தது.

நடு­வா­னில் விமா­னம் பறந்து கொண்­டி­ருந்­த­போது, தஞ்­சா­வூ­ரைச் சேர்ந்த சேவி­யர், 54, என்­ப­வர் திடீ­ரென தனது பாக்­கெட்­டில் மறைத்து வைத்­தி­ருந்த சிக­ரெட்டை எடுத்து பற்ற வைத்து புகைத்­தார்.

இதைப் பார்த்­த­தும் சக பய­ணி­கள் எரிச்சல் அடைந்­த­னர்.சிலர் புகைக்காதீர்கள் என்றும் அறிவுறுத்தினர். இதையெல்லாம் சேவியர் பொருட்­ப­டுத்­த­வில்லை. விமா­னப் பணிப்­பெண்­கள் கண்­டித்­தும் கேட்­க­வில்லை.

இதை­ய­டுத்து விமான அதி­காரியிடம் பணிப்­பெண்­கள் இந்த விவ­ரத்­தைக் கூறி­னர். உட­ன­டி­யாக அவர், சென்னை விமான நிலை­யக் கட்­டுப்­பாட்டு அறைக் குத் தெரி­வித்­தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையப் பாது­காப்பு அதி­கா­ரி­களும் இண்­டிகோ ஏர்­லைன்ஸ் பாது­காப்பு அதி­கா­ரி­களும் ஓடு­பாதை பகு­தி­யில் காத்­தி­ருந்­த­னர். விமா­னம் தரை இறங்­கி­ய­தும் அவரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.