நடைமேடை மீது ஏறிய ரயில்; ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு

நடைமேடை மீது ஏறிய ரயில்; ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு

2 mins read
3b4f66ab-b14a-478f-a786-48a0491ec216
கட்­டுப்­பாட்டை இழந்த ரயில் தடுப்­பை­யும் மீறி நடை­மேை­ட­யில் ஏறி நின்றது. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: சென்னை கடற்­கரை ரயில் நிலை­யத்­தில் கட்­டுப்­பாட்டை இழந்த மின்­சார ரயில், நடை மேடை­யில் ஏறி விபத்­துக்­குள்­ளான காணொ­ளிக் காட்­சி­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

அதில், வழக்­கம்­போல் பயணி கள் நடை­மே­டை­யில் நின்றுகொண்­டி­ருந்தபோது, திடீ­ரென நடை­மேடை­யின் மீது ரயில் ஏறியதைப் பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்த பய­ணி­கள் அங்­கி­ருந்து பதற்­றத்துடன் ஓடிச்­சென்ற காட்­சி­கள் பதி­வா­கி­யுள்­ளன.

இந்­தச் சம்­ப­வம் குறித்து, எழும்­பூர் ரயில்வே காவல்­நி­லை­யத்­தில், ெசன்னை கடற்­கரை ரயில் நிலை­யக் கண்­கா­ணிப்­பா­ளர் துர்­கா­ராம் என்­ப­வர் அளித்த புகாரை அடுத்து, ரயி­லின் ஓட்­டு­நர் மீது மூன்று பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், சென்னை ரயில்வே பாது­காப்பு அதி­காரி பிரேம்­கு­மார் தலை­மை­யில் விசா­ரணை நடத்த ஐவர் கொண்ட விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. குழு­வில் இயந்­திர, மின்­னி­யல் துறை அதி­கா­ரி­களும் இடம்­பெ­று­வார்­கள் என ரயில்வே நிர்­வா­கம் கூறி­யுள்­ளது.

எப்­போ­தும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பய­ணம் செய்­யும் இந்த ரயி­லில் அதிர்ஷ்­ட­வ­ச­மாக விபத்து நடந்த நேரத்­தில் யாரும் பய­ணம் செய்­யா­த­தால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்­கப்­பட்­ட­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பரா­ம­ரிப்­புப் பணி­கள் முடிவ டைந்து ரயில்வே பணி­ம­னை­யில் இருந்து வெறும் ரயி­லாக செங்­கல்­பட்டு செல்­வ­தற்­காக வந்துகொண் டிருந்த ரயி­லில் பய­ணி­கள் யாரு மில்லை என­வும் தெற்கு ரயில்வே தெரி­வித்­தது.

கட்­டுப்­பாட்டை இழந்த ரயில் தடுப்­பை­யும் மீறி நடை­மேை­ட­யில் ஏறி­ய­போது தீப்­பொறி எழுந்­த­து­டன், பயங்­கர சத்­தம் கேட்­ட­தா­க­வும் சம்­ப­வத்தை நேரில் பார்த்­த­வர்­கள் கூறி­யுள்­ள­னர்.

இந்த விபத்­தி­னால் நடை­மே­டை­யின் மேற்­கூ­ரை­யும் நடை­மே­டை­யில் இருந்த குடிநீா் விற்­ப­னைக் கடை­களும் சேத­ம­டைந்­தன.

ரயி­லின் ஓட்­டு­நர் பவித்­ரன் ரயி­லில் இருந்து குதித்து உயிர் தப்­பிய நிலை­யில், அவர் மது­போ­தை­யில் இருந்­தாரா என­வும் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

இந்த விபத்­தில் ரயி­லின் இயந்­தி­ரப் பெட்­டி­யும் பய­ணி­கள் பெட்­டி­யும் சேத­ம­டைந்­தன. பத்து மணி நேரப் போராட்­டத்­திற்குப் பிறகு சேதமடைந்த ரயில் பெட்­டி­கள் மீட்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

ரயில்வே உய­ர­தி­கா­ரி­கள் ஓட்டு நர்­ பவித்­ர­னி­டம் நடத்­திய முதற்­கட்ட விசா­ர­ணை­யில், 'பிரேக்' பிடிக்­கா­த­தால் விபத்து நிகழ்ந்­த­தா­கக் கூறியுள்ள நிலையில், ஓட்­டு­ந­ரின் கவ­னக்­குறைவே விபத்திற்குக் கார­ணம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.