சென்னை: மாநில அரசே தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதத்துக்குப் பிறகு நேற்று ஒருமனதாக நிறைவேறியது.
இதன்மூலம் தமிழகப் பல்க லைக் கழகங்களில் துணை வேந் தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், துறைத் தலைவர்களாக உள்ள பேராசிரியர்கள் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நீலகிரி மாவட்டம், உதகையில் தன்னிச்சையாக கூட்டியிருப்பதற்குப் பதிலடியாக இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்றுள்ளது.
இதற்கிடையே, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டில் உரை யாற்றிய ஆளுநர், "தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை என்றும் பல்கலைக்கழகங்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்," என்றும் வலியுறுத்தி உள்ளார்.

