பேருந்துப் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் தோப்புக்கரணம் போட்டனர்

பேருந்துப் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் தோப்புக்கரணம் போட்டனர்

1 mins read
6e30dc2f-05f6-4de2-8192-ab207809a0ee
தோப்புக்கரணம் போடும் மாணவர்கள். படம்: ஊடகம் -

சென்னை: பல­முறை எச்­ச­ரிக்கை விடுத்­தும், பேருந்­துப் படி­க்கட்­டில் பய­ணம் செய்த பள்ளி மாண­வர்­களை காவல்­து­றை­யி­னர் பிடித்து தோப்­புக்­க­ர­ணம் போட வைத்­த­னர்.

அண்­மைக்­கா­ல­மாக சென்­னை­யில் பள்ளி மாண­வர்­கள் பேருந்­தில் தொங்­கி­ய­படி, ஆபத்­தான முறை­யில் பய­ணம் மேற்­கொள்­வது அதி­க­ரித்து வரு­கிறது.

இவ்­வாறு பய­ணம் செய்­வது உயி­ருக்கு ஆபத்தை விளை­விக்­கும் என்று காவல்­துறை பல­முறை எச்­ச­ரிக்கை விடுத்­தும் மாண­வர்­க­ளின் போக்கு மாற­வில்லை.

பள்ளி மாணவ, மாணவியர் இவ்வாறான ஆபத்தான செயல்களில் ஈடுபட்டால் அவர்களைப் பிடித்து வைத்து அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு, காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை­ய­டுத்து, நேற்று சென்னை ஆவ­டிப் பகு­தி­யில், பேருந்­துப் படிக்­கட்­டு­களில் தொங்­கி­ய­படி சென்ற மாண­வர்­க­ளைப் பிடித்து போலி­சார் தோப்­புக்­க­ர­ணம் போட வைத்­த­னர். மேலும், இனி­மேல் இவ்­வாறு செய்­யக்­கூ­டாது என்று அறி­வு­ரை­யும் கூறி­னர்.