பேரறிவாளனை விடுவிப்பதுதான் சரியான நடவடிக்கை என்கிறது உச்ச நீதிமன்றம்

பேரறிவாளனை விடுவிப்பதுதான் சரியான நடவடிக்கை என்கிறது உச்ச நீதிமன்றம்

1 mins read
6177e874-5ad7-46d3-8289-f0e4aa8feb1b
-

சென்னை: தன்னை விடு­தலை செய்­யக்­கோரி பேர­றி­வா­ளன் (படம்) தொடரப்­பட்ட வழக்கு நேற்று உச்ச நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது, பேர­றி­வா­ளனை விடு­விப்­பதே சரி­யான நட­வ­டிக்­கை­யாக இருக்­கும் என்று நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

பேர­றி­வா­ளன் தற்­போது சிறை விடுப்­பில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ருக்கு உச்ச நீதி­மன்­றம் கடந்த மார்ச் 9ஆம் தேதி பிணை வழங்கி உத்­த­ர­விட்­டது.

இந்­நி­லை­யில், முப்­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சிறை­வா­சம் அனு­ப­வித்து வரும் பேர­றி­வா­ளன், தம்மை விடு­தலை செய்­யக் கோரி உச்ச நீதி­மன்­றத்தை அணுகினார்.

தம்மை விடு­விக்க தமி­ழக அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது என்­றும் அதன் பிற­கும்­கூட தமி­ழக ஆளு­நர் இது தொடர்­பாக எந்­த­வித முடி­வும் எடுக்­கா­மல் காலம் தாழ்த்­து­கி­றார் என்­றும் அவ­ரது தரப்பு வாதத்தை முன்­வைத்­துள்­ளது. இதை­ய­டுத்து, கருத்து தெரி­வித்த உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள், அமைச்­ச­ர­வை­யின் ஒவ்­வொரு முடி­வுக்­கும் மாநில ஆளு­நர் செயல்­பட்­டால் கூட்­டாட்­சிக்கு பாத­கம் ஏற்­படும் என்­ற­னர்.

"அமைச்­ச­ர­வை­யின் பரிந்­து­ரை­க­ளைக் குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்ப மாநில ஆளு­ந­ருக்கு என்ன அதி­கா­ரம் உள்­ளது என்­பது குறித்து அடுத்த ஒரு வாரத்­தில் மத்­திய அரசு பதி­ல­ளிக்க வேண்­டும்.

"யார் விடு­தலை செய்­வது என்­கிற குழப்­பம் நீடிப்­ப­தால் பேர­றி­வா­ளனை ஏன் நீதி­மன்­றமே விடு­விக்­கக் கூடாது? பேர­றி­வா­ளனை விடு­விப்­பதே இந்த வழக்­கிற்கு ஒரே தீர்வு," என மத்­திய அரசுக்கு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.