கோடநாடு வழக்கு: விசாரணை அதிகாரி திடீர் இடமாற்றம்

கோடநாடு வழக்கு: விசாரணை அதிகாரி திடீர் இடமாற்றம்

1 mins read
869345b5-6dbe-4792-9e89-46cab432b555
-

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ், தேனி மாவட்டத்துக்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.