ஈக்கள் தொல்லையால் காலியாகும் ஊர்

ஈக்கள் தொல்லையால் காலியாகும் ஊர்

2 mins read
ac015a87-6e71-4c48-a7a2-bc5f802a90f0
-

கோவை: கோவை மாவட்­டம், திம்­மன்­நா­யக்­கன்­பா­ளை­யம் கிராம மக்­கள் ஈக்­கள் தொல்­லை­யால் ஊரையே காலி செய்­து­வி­டும் நிலைக்கு ஆளா­கி­யுள்­ள­னர்.

'நான் ஈ' திரைப்­ப­டத்­தில் கிரா­பிக்­சில் வடி­வ­மைக்­கப்­பட்ட ஒரு ஈயின் தொல்லை தாங்­க­மு­டி­யா­மல் வில்­லன் தூங்­க­மு­டி­யா­மல், சாப்­பி­ட­மு­டி­யா­மல் ஓடி ஒளி­வ­தைப் பார்த்­தி­ருப்­போம்.

இதே­போல், திம்­மன்­நா­யக்­கன்­பா­ளை­யத்­தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஈக்­கள் படை­யெ­டுப்­பால் அந்­தக் கிராம மக்­கள் அனை­வ­ரும் சாப்­பிட முடி­யா­மல் தூங்­க­மு­டி­யா­மல் தவித்து வரு­கின்­ற­னர்.

சிலர் ஊரை காலி செய்து­விட்டுச் சென்ற நிலை­யில், பலர் சொந்த வீட்டை விட்டுச் செல்ல முடி­யா­ம­லும் ஈ தொல்­லை­யில் இருந்து விடு­பட முடி­யா­ம­லும் மன உளைச்­ச­லுக்கு ஆளாகி வரு­வ­தாக கிராம மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

"புதிய வீட்டு கிரகப்பிரவே சத்துக்கு இவ்­வ­ளவு ஈக்­கள் வரும் என்று எங்­க­ளுக்­குத் தெரி­யாது. இந்த நிகழ்­வுக்கு வந்­த­வர்­கள் சாப்­பி­டா­ம­லேேய சென்­று­விட்­ட­னர். இத­னால் எங்­க­ளுக்கு பெரிய மன உளைச்­சல் ஏற்­பட்­டது. தெரி­யா­மல் இந்த ஊருக்கு வந்­து­விட்­டோமா என கவலை ஏற்­பட்­டது.

"எப்­போ­தும் வீட்­டில் சண்டை­யா­கத்­தான் உள்­ளது. இங்­குள்­ள­வர்­க­ளுக்கு ஒரு நிம்­ம­தி­யான மன­நி­லை­மையே இல்லை," என்று இங்கு வசிக்கும் சித்ரா கூறி­யுள்­ளார்.

மரம், செடி­கள், தெருக்­கள், வீடு­கள் முழு­வ­தும் பரவி இருக்­கும் ஈக்­கள் சாப்­பி­டும்போதும் தேநீர் அருந்­தும்­போ­தும் மொய்­யப்­ப­தால் சிறி­ய­வர்­கள் முதல் முதி­ய­வர்­கள் வரை அனை­வ­ருக்­கும் சுகா­தா­ரக் கேடு ஏற்­ப­டு­வ­தா­க­வும் கிராம மக்­கள் கூறி­னர்.

திம்­மன்­நா­யக்­கன் பாளை­யத்­தைச் சுற்றி இயங்­கும் கோழிப் பண்ணைகளும் திறந்த வெளி­யில் கொட்­டப்­படும் கோழிப் பண்ணை கழி­வு­க­ளுமே ஈக்­கள் படை­யெ­டுக்க முக்­கிய கார­ணம் என மக்­கள் கூறு­வதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈ தொல்லையில் இருந்து விடுபட அரசு நடவடிக்கை எடுக்காவிடில் குடும்பத்ேதாடு ஊரைக் காலி செய்துவிட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.