சென்னை: திமுகதான் பாஜகவின் முதல் எதிரி என்று தமிழக பாஜக நிர்வாகிகளிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே, திமுக அரசை எதிர்த்து நிர்வாகிகள் ஒருங்கிணைந்து தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும் என தமிழக பாஜகவுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என அமித்ஷா இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தமிழக ஊடகம் மேலும் கூறியுள்ளது.

