எல்லாக் கட்சிகளும் ஆதரவு

எல்லாக் கட்சிகளும் ஆதரவு

2 mins read
0bbb8706-282d-46f2-97b5-a7c2b4674f0a
-

சென்னை: தமி­ழ­கத்­தி­லி­ருந்து இலங்கை மக்­க­ளுக்கு உதவ மத்­திய அர­சின் அனு­மதி கோரி சட்­டப்­பே­ர­வை­யில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

இந்­தத் தீர்­மா­னத்தை முதல்­வர் மு.க. ஸ்டா­லின் பேர­வை­யில் முன்­மொ­ழிந்து பேசி­னார்.

அப்­போது அவர் கூறு­கை­யில், "இலங்­கைக்கு உதவ, மத்­திய அர­சி­டம் அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே அனு­மதி கேட்­டும் இது­வரை பதில் வர­வில்லை.

"இலங்­கை­யில் உள்ள தமி­ழர்­

க­ளுக்கு மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் உத­விட தமி­ழக அரசு தயா­ராக உள்­ளது. அங்கு மண்­ணெண்­ணெய் வாங்க மக்கள் பல மணி நேரம் காத்­தி­ருக்கவேண்­டிய நிலை உள்­ளது. 15 கோடி­ 500 டன் பால்­மாவு, 80 கோடி ரூபாயில் 40,000 டன் அரிசி, 28 கோடி­ ரூபாயில் 137 வகை­யான மருந்­துப் பொருள்கள் ஆகி­ய­வற்றை இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்கு வழங்க தமி­ழக அரசு தயா­ராக இருக்­கிறது.

"இதற்கு உரிய அனு­ம­தியை வழங்கவேண்­டும் என்று கேட்டு மத்­திய அர­சிற்கு ஏற்­கெனவே தமி­ழக அரசு கடி­தம் எழு­தி­யி­ருக்­கிறது.

"இந்­தக் கோரிக்­கையை ஏற்று, கடும் இன்­னல்­க­ளுக்கு உள்­ளாகி இருக்­கிற இலங்கை மக்­க­ளுக்கு அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை உட­ன­டி­யாக அனுப்ப மத்­திய அரசு அனு­மதி வழங்க வேண்­டும்.

"மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் நம்­மால் முடிந்த உத­வி­க­ளைச் செய்ய வேண்­டும்," என்று தெரி­வித்­தார்.

இந்தத் தனித் தீர்­மா­னம் குரல் வாக்­கெ­டுப்பு மூலம் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. அதி­முக உள்­ளிட்ட அனைத்­துக் கட்­சி­யி­ன­ரும் தீர்­மா­னத்தை ஆத­ரித்­த­னர்.

இலங்கை மக்களுக்கு உதவி: மத்திய அரசிடம் அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேறியது