சென்னை 2வது விமான நிலையம்: பரிசீலனையில் நான்கு இடங்கள்

சென்னை 2வது விமான நிலையம்: பரிசீலனையில் நான்கு இடங்கள்

1 mins read
bde2406f-48b5-4168-a9a8-271a6ec1355f
-

புதுடெல்லி: சென்­னைக்­கான இரண்­டா­வது விமான நிலை­யத்தை செங்­கல்­பட்டு மாவட்­டம், பரந்­தூர் அல்­லது பன்­னூ­ரில் அமைப்­ப­தற்கு சாத்­தி­யம் இருப்­ப­தாக மத்­திய சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் ஜோதி­ரா­தித்ய சிந்­தியா தெரி­வித்­தார்.

இது­கு­றித்து விரு­து­ந­கர் மக்­க­ள­வைத் தொகுதி காங்­கி­ரஸ் உறுப்­பி­னர் ப.மாணிக்­கம் தாகூர் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார். அவ­ருக்­குத் பதி­ல­ளித்து அமைச்­சர் ஜோதி­ரா­தித்ய சிந்­தியா கடி­தம் ஒன்றை அனுப்பி உள்­ளார்.

அதில், "சென்­னை­யின் 2ஆவது விமான நிலை­யத்­துக்கு மாநில அரசு திருப்­போ­ரூர், பரந்­தூர், படா­லம், பன்­னூர் ஆகிய நான்கு இடங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது. இவற்றை ஆய்வு ெசய்­த­தில் பரந்­தூர் மற்­றும் பன்­னூர் ஆகிய இரு இடங்­கள் வான்­வெ­ளி­யின் தன்­மைக்கு ஒப்­பீட்­ட­ள­வில் மிக­வும் சாத்­தி­ய­மா­ன­தாக உள்­ளன. குறிப்­பாக, இயற்­கைத் தடை­க­ளற்­ற­வை­யாக உள்­ளன. இருப்­பி­னும், மனி­தத் தடை­கள் உள்­ளன. ஏரி­கள், தொழிற்­சா­லை­கள் வெளி­யி­டும் புகை போன்ற இடை­யூ­று­கள் விமா­னப் போக்­கு­வ­ரத்­துக்­குத் தடை­யாக இருப்­பவை. இது தொடர்­பாக தமி­ழக அர­சி­டம் அறிக்கை கோரப்­பட்டு உள்­ளது. விரை­வில் இறுதி முடிவு எடுக்­கப்­படும்," என்று கூறி­யுள்­ளார்.