ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முருகே சனும் இவரது தம்பி பச்சமுத்து வும் விவசாயம் செய்கின்றனர். மூன்றாண்டுகளுக்கு முன்பு இவர்களது தாயார் அலமேலு, 72, இறந்துவிட்டார். தாயின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்த இவர்கள் இருவரும் தாய் இறந்த சோகத்தில் மூழ்கினர். தங்களைப் பெற்ற தாய்க்குக் கோவில் கட்ட முடிவு செய்த இருவரும் தங்க ளது தோட்டத்தின் ஒரு பகுதியில் கருங்கற்களால் கோவில் கட்டி னர். கருவறையில் 2¾ அடி உயரத்தில் தங்களின் தாயாரின் முகவடிவில் கருங்கல் சிலை அமைத்தனர். தினமும் தாயின் சிலைக்கு பால் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
தாய்க்குக் கோவில் கட்டிய மகன்கள்
1 mins read
தாயாரின் உருவச் சிலையை அமைத்து வழிபடும் மகன்கள். படம்: தமிழக ஊடகம் -

