சித்ராவைக் கொன்ற அரசியல்வாதிகளால் தமது உயிருக்கு ஆபத்து என கணவர் அச்சம்

சித்ராவைக் கொன்ற அரசியல்வாதிகளால் தமது உயிருக்கு ஆபத்து என கணவர் அச்சம்

1 mins read
7c326830-4049-48aa-ac56-e610ae2ab39f
-

சென்னை: பிர­பல தொலைக்­காட்­சித் தொடர்­களில் நடித்து வந்த நடிகை சித்ரா (படம்), கடந்த 2020ம் ஆண்டு திடீ­ரென தற்­கொலை செய்­து­கொண்­டார்.

இந்த விவ­கா­ரத்­தில், அவ­ரது கண­வர் ஹேமந்த் கைது செய்­யப்­பட்டு, பின்­னர், பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், சென்னை காவல்­ துறை ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில், தமது உயி­ருக்கு அச்­சு­றுத்­தல் இருப்­ப­தாக ஹேமந்த் புகார் அளித்­துள்­ளார்.

அதில், தமது மனைவி சித்­ரா­வின் தற்­கொலை பின்­ன­ணி­யில், பலம் வாய்ந்த அர­சி­யல் புள்­ளி­கள் இருந்­த­தாகத் தெரி­வித்­துள்­ளார். அவர்­க­ளி­டமிருந்த ஒரு கும்­பல் தம்மைப் பயன்­ப­டுத்தி பணம் பறிக்க முயற்­சி செய்வதாகவும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

"சித்ரா மர­ணத்­திற்கு கார­ண­மான அர­சி­யல் புள்ளிகளால் எனது உயி­ருக்கு ஆபத்து உள்­ளது. அவர்­கள் என் உயி­ருக்குக் குறி­வைத்து உள்­ள­னர். எனக்கு பாது­காப்பு தேவை. உயி­ருக்குப் பயந்து வழக்­ க­றி­ஞர் வீட்­டில் தஞ்­சம் அடைந்­துள்­ளேன்," என்று கூறி­யுள்­ளார்.