சென்னை: சிறப்பு வாகனத் தணிக்கை மூலம் சென்னையில் ஒரே நாளில் 2,000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் பிடிபட்டனர். சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் விபத்துகளை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை பெருநகரம் முழுவதும், நேற்று ஒரு நாள் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையில், விதிகளுக்கு முரணாக வாகனம் ஓட்டியது தொடர்பாக மூன்று மண்டலங்களில் 1,595 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக மொத்தம் 403 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல வேகமாக வாகனம் ஓட்டியதாக 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு வாகனத் தணிக்கை நடவடிக்கைகள் தொடரும் என போக்குவரத்து காவல்துறை கூறியது.

