சேலம்: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் பாம்பலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க, பதிவு செய்த 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்ட னர். பட்டியிலிருந்து அறுத்து
விடப்பட்ட காளை ஒன்று, எதிரே திரும்பி வந்த மற்றொரு காளையை முட்டியது. இதில் முட்டுப்பட்ட மாடு உயிரிழந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து உலிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

