பெயரில் பிழை: எம்.பி. தலையீடு
கோவை: கோயம்புத்தூர் ரயில் நிலையம் ஆறு நடைமேடை கள், 20 தண்டவாளப் பாதைகளைக் கொண்ட தென்னிந்தியா வின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்று. சிறப்பு வாய்ந்த இந்த ரயில் நிலையத்தின் பெயர் தமிழில் 'கோயம்பத்தூர்' ரயில் நிலையம் என ரயில் நிலையத்தின் பின் பகுதியில் தவறாக எழுதப்பட்டுள்ளது (படம்). பிரபலமான பெயரை தவறாக எழுதியது வேண்டுமென்றே செய்யப்பட்டதா எனபதை விசாரிக்குமாறு தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கத்தியால் குத்தப்பட்ட மாணவி
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்றுக் காலை பள்ளிக்குச் சென்றுகொண்டு இருந்தபோது பெட்போர்டு சாலை அரு கில் கத்தியால் குத்தப்பட்டார். ரத்தம் சொட்டச் சொட்ட வலியால் துடித்த மாணவி கோவை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவரைக் கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற ஆசிக், 26, என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெற்ற பிள்ளையை விற்ற அன்னை
நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே 5 வயது பெண் குழந்தையை விற்பனை செய்த, குழந்தை யின் தாய் தங்கசெல்வி என்பவர் உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். குழந்தையை1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய செல்வகுமார்-சந்தனவின்சியா என்னும் கேரள தம்பதியும் கைது செய்யப்பட்டோரில் அடங்கு வர். குழந்தையின் தந்தை அர்ஜுன் தலைமறைவாகிவிட்டார்.
பாதுகாப்புடன் நடந்த தேரோட்டம்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்க நாதர் சுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்த னர். இந்த வாரம் தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் மீது மினசாரக் கம்பிகள் உரசி விபத்து ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றுக் காலை
6 மணி முதல் ஸ்ரீரங்கத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
3 மாவட்டச் செயலர்கள் நீக்கம்
சென்னை: சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர்
சே. செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், விருதுநகர் மாவட்டச் செய லாளர் ஆர்.எம். சண்முகசுந்தரம் ஆகிய மூவரும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு உள்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார். வைகோவின் மகன் துரை வையாபுரிக்குக் கட்சியில் பொறுப்பு கொடுத்ததைத் தொடர்ந்து மதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுகிறது.

