அரிவாள் வெட்டு: இரண்டு துண்டான கையை ஒட்ட வைத்த அரசு மருத்துவர்கள்

அரிவாள் வெட்டு: இரண்டு துண்டான கையை ஒட்ட வைத்த அரசு மருத்துவர்கள்

2 mins read
c96e91ee-8325-4745-b683-195ce7aff3b7
-

திருப்­பூர்: இரண்டு துண்­டு­க­ளாக வெட்­டப்­பட்ட கையை அறுவை சிகிச்சை மூலம் ஒட்ட வைத்து கோவை அரசு மருத்­து­வ­மனை மருத்­து­வர்­கள் சாதனை படைத்­துள்­ள­னர்.

ஒடிசா மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர் கணேஷ். 21 வய­தான இவர் திருப்­பூர் மாவட்­டத்­தில் வசித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் கடந்த 8ஆம் தேதி குடும்­பத் தக­ராறு கார­ண­மாக, உற­வி­னர் ஒரு­வர் கணேஷை அரி­வாள் கொண்டு சர­மா­ரி­யா­கத் தாக்­கி­னார். இதில் அவ­ரது முதுகு, கழுத்து, ஆகி­ய­வற்­றில் கடும் வெட்­டுக் காயங்­கள் ஏற்­பட்­ட­து­டன், கணே­ஷின் வலது கையும் துண்­டா­னது.

இதைக்­கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த அக்­கம் பக்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் உட­ன­டி­யாக அவரை மீட்டு கோவை அரசு மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர். மேலும், அவ­ரது துண்­டான கைவி­ரல்­கள் ஈரத்­து­ணி­யால் சுற்றி ஐஸ்­கட்டி பெட்­டி­யில் வைத்து பத்­தி­ர­மாக கொண்டு வரப்­பட்­டன.

கணே­ஷின் வலது கை இரண்டு துண்­டாக வெட்­டப்­பட்­டி­ருந்­ததை அடுத்து, அவ­ருக்கு உட­ன­டி­யாக அறுவை சிகிச்சை செய்­வது என அரசு மருத்­து­வர்­கள் குழு முடிவு செய்­தது. இதை­ய­டுத்து மிக­வும் சிக்­க­லான அறுவை சிகிச்சை நடை­பெற்­றது.

இதன் மூலம் துண்­டான கையை­யும் விரல்­க­ளை­யும் மீண்­டும் உட­லு­டன் இணைத்த மருத்­து­வர்­கள், எலும்­பு­கள், தசை­கள், நரம்­பு­கள், ரத்­தக் குழாய்­களும் வெற்­றி­க­ர­மாக இணைக்­கப்­பட்­ட­தாக அரசு மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

இதை­ய­டுத்து கணேஷ் கடந்த இரு­பது நாள்­க­ளாக மருத்­து­வர்­க­ளின் மேற்­பார்­வை­யில் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

சிக்­க­லான அறுவை சிகிச்­சைக்­குப் பிறகு கணேஷ் இப்­போது நன்கு குண­ம­டைந்து வரு­வ­தா­க­வும் அவ­ரது கைகள் பழை­ய­படி இயங்­கும் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது. அறுவை சிகிச்சை மேற்­கொண்ட அரசு மருத்­து­வக் குழு­வுக்கு பல்­வேறு தரப்­பி­ன­ரும் தங்­க­ளது பாராட்­டு­க­ளைத் தெரி­வித்­துள்­ள­னர்.

கணே­ஷுக்கு தொடர்ந்து மருத்­துவ ஆலோ­சனை வழங்­கப்­படும் எனத் தெரி­கிறது.