ஆண்கள் மட்டும் பங்கேற்ற அசைவத் திருவிழா

ஆண்கள் மட்டும் பங்கேற்ற அசைவத் திருவிழா

1 mins read
ea95ed70-2191-4a42-b0d1-fcf21f570d9e
-

சிவ­கங்கை: ஆண்­கள் மட்­டுமே பங்­கேற்­கும் அசை­வத் திரு­வி­ழா­வில் ஐந்­தா­யி­ரம் பேர் பங்­கேற்று கறி விருந்து உண்டு மகிழ்ந்­த­னர்.

சிவ­கங்கை அருகே உள்ள திரு­ம­லைக் கிரா­மத்­தில் ஆண்­டு­தோ­றும் இந்த விருந்து நிகழ்வு நடை­பெற்று வரு­கிறது.

சுற்­று­வட்­டா­ரத்­தில் உள்ள பெரும்­பா­லான ஆண்­கள் இதில் பங்­கேற்று கருப்­ப­சா­மிக்கு கறி­விருந்தை படை­ய­லிட்டு, பிறகு அதை உ ண்டு மகிழ்­வர்.

அதன்­படி இந்த ஆண்­டும் திரு­மலை கிரா­மத்­தில் சித்­தி­ரைத் திரு­விழா நடை­பெற்­றது. நேற்று அங்கு கண்­மாய் கரை­யில் உள்ள காவல் தெய்­வ­மான மடை கருப்­ப­சா­மிக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட ஆடு­கள் பலி­கொ­டுக்­கப்­பட்­டன. பின்­னர் அதி­காலை வேளை­யி­லேயே கறி விருந்து தயா­ரிக்­கப்­பட்­டது. இதற்­கா­கப் பிரம்­மாண்­டப் பாத்­தி­ரங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

விருந்து தயா­ரா­ன­தும் கருப்­ப­சா­மிக்கு சிறப்­புப் பூசை­கள் நடத்தப்­பட்டு, பின்­னர் உணவு பரி­மா­றப்­பட்­டது. திரு­வி­ழா­வில் பங்­கேற்ற பக்­தர்­கள் அசைவ உணவை ஆர்­வத்­து­டன் உண்டு மகிழ்ந்­த­னர்.