சென்னை: மலேசியாவுக்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் கொரோனா நெருக்கடிக்கு முன்பிருந்தது போல் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சுற்றுலா மேற்கொள்ளலாம் என்று தென்னிந்தியாவுக்கான மலேசியத் துணைத்தூதர் கே.சரவணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில் நூறாயிரம் பேர்வரை மலேசியாவுக்கு சுற்றுலா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மலேசிய அரசு நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது மட்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார்.
"மலேசிய சுற்றுலாத் துறையிடம் அனுமதி பெற்றுள்ள முகவர்கள் வழியாக பயணம் செய்பவர்கள் ஏதேனும் புகார் தெரிவித்தால் சம்பந்தபட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
"மேலும், அனுமதி பெறாத முகவர்கள் மூலம் சுற்றுலா செல்வதைத் தவிர்க்க வேண்டும்," என்று துணைத்தூதர் கே.சரவணன் தெரிவித்தார்.

