தென் மாவட்டங்களில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் குமரி மாவட்டம் குலசேகரம் திருவட்டார் அருவிக்கரை, பேச்சிப்பாறை, திற்பரப்பு, சுருளோடு, பெருஞ்சாணி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரம் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. படம்: தகவல் ஊடகம்
ஆர்ப்பரிக்கும் திற்பரப்பு அருவி
1 mins read
-

