உதகை: தமிழக அரசு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், உதகையில் வரும் 12ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளைக் காண்பதற்காக உதகைக்கு வந்திருந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"தமிழகத்தில் இதுவரை 56 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 72,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
"மாநில அரசு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது," என அமைச்சர் தெரிவித்தார்.

