மயிலாப்பூர்: டார்ஜிலிங்கில் தங்கிப் படித்து வரும் தனது 15 வயது மகனின் படிப்புச் செலவுக்காக இரட்டைக் கொலைகளைச் செய்து ரூ.40 கோடி பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார் கார் ஓட்டுநர் கிருஷ்ணா.
"மயிலாப்பூரில் வசித்து வந்த ஸ்ரீகாந்த், 60, அனுராதா, 55, தம்பதியரை ரூ.40 கோடி பணத்துக்காகவே எனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தேன்.
"ஸ்ரீகாந்திடம் நான் கடந்த பத்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். என் மீது அவர் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார்.
"நான் கார் ஓட்டுநராக இருந்தாலும் அவர்களது வீட்டு வேலைகள் அைனத்தையும் செய்வேன். ஆனால், எனது உழைப்புக்கேற்ற சம்பளத்தை கொடுக்கவில்லை.
"எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. என் மகன் டார்ஜிலிங்கில் படிக்கிறான். நான் ஸ்ரீகாந்த் வீட்டிலேயே தங்கி இருந்தேன். என் மகனின் படிப்புக்கு உதவும்படி அவரிடம் கேட்டேன். அவரிடம் நிறைய பணம் இருந்தும் முடியாது எனக் கூறிவிட்டார்.
"தீபாவளி என்றால் நகைகள், துணிகளுடன் மிகவும் ஆடம்பரமாக குடும்பத்துடன் கொண்டாடுவார். அவர் வீட்டிலேயே இருக்கும் எனக்கு ஒரு கிலோ இனிப்பு பொட்டலம் மட்டுமே கொடுப்பார். அண்ைமயில் ஈசிஆரில் ஒரு நிலம் விற்கப்பட்டது. அந்தப் பணம் ரூ.40 கோடி அவரது வீட்டில் இருக்குமென நினைத்தே இந்தக் கொலைகளைச் செய்தோம். ஆனால் 1,000 சவரன் நகைகள்தான் இருந்தன.
"கொள்ளையடித்த நகைகளுடன் ஆந்திரா வழியாக நேப் பாளம் தப்பிச் செல்ல முயன்றபோது ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர்," என்று கிருஷ்ணா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
மயிலாப்பூர் காவல்துைறயினரின் விசாரணை தொடர்கிறது.

