மயில்சாமி அண்ணாதுரை: தாய்மொழியில் படித்ததால் சாதனை படைத்தேன்

மயில்சாமி அண்ணாதுரை: தாய்மொழியில் படித்ததால் சாதனை படைத்தேன்

1 mins read
a5de1ada-106b-4359-bd86-b9e755af3a31
மயில்சாமி அண்ணாதுரை.படம்: ஊடகம் -

பெங்­க­ளூரு: தாய்­மொ­ழி­யான தமி­ழில் படித்­த­தால்தான் தன்­னால் அறி­வி­ய­லில் சாதனை படைக்க முடிந்­தது என்று விண்­வெளி விஞ்­ஞானி மயில்­சாமி அண்­ணா­துரை தெரி­வித்­தார்.

பெங்­க­ளூ­ரு­வில் 'தமிழைக் கொண்­டா­டு­வோம்' என்ற நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்டு பேசிய அவர், தாய்­மொ­ழி­யில் தாம் கல்வி கற்றதை பெரு­மை­யா­கக் கரு­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

இயல், இசை, நாட­கத்தை அடுத்து அறி­வி­ய­லில் தமிழ் வேக­மாக வளர்ந்து வரு­வ­தா­கத் தெரி­வித்த மயில்­சாமி அண்­ணா­துரை, தாய்­மொ­ழி­யில் சிந்­திக்­கும் குழந்­தை­க­ளின் திறன் மேம்­பட்­ட­தாக இருக்­கும் என்­றார்.

தமி­ழில் படித்­த­வர்­க­ளால் எதை­யும் சாதிக்க முடி­யும் என்­றும் தாய்­மொ­ழி­யில் படிக்­கும்­போது சுய­மாக சிந்­திக்க முடி­கிறது என்­றும் அவர் கூறி­னார்.

"நில­வுக்­கும் செவ்­வாய் கிர­கத்­திற்­கும் விண்­க­லம் அனுப்ப பல நாடு­கள் முயற்சி செய்­தன. அந்த முயற்சி தோல்­வி­யில் முடிந்­தது.

"ஆனால் நில­வுக்கு 'சந்­தி­ர­யான்' செயற்­கைக்­கோளை முதல் முயற்­சி­யி­லேயே அனுப்பி வெற்றி பெற்­றோம். தமி­ழர்­க­ளுக்கு இயல்­பா­கவே அறி­வாற்­றல் அதி­கம். தாய்­மொ­ழி­யில் படிக்­கும்­போது சுய­மாக சிந்­திக்க முடி­கிறது. அந்த சுய­சிந்­தனை தான் கூர்மை­யான அறி­வுக்கு அடித்­த­ள­மாக அமைகிறது," என்­றார் மயில்­சாமி அண்­ணா­துரை.