அமைச்சர்: உபரி மின்சாரம் விற்று சாதித்தது தமிழகம்

1 mins read
b0f56bfa-1385-4a3a-9a80-8f85bd987cc6
-

சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்தடை அமலில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடிவரும் நிலையில், தமிழகத்தில் இருந்து 4.5 லட்சம் யூனிட் மின்சாரம் வெளிச் சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற மின்சாரத்துறை யின் ஆய்வுக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் உச்சபட்ச தேவையான 17,563 மெகாவாட் மின்சாரம், கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி எந்தவித மின் தடங்கலும் இன்றி ஈடுகட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

"பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படு கிறது. அண்மைய சில தினங்களில் சுமார் 4.5 லட்சம் யூனிட் மின்சாரம், ஒரு யூனிட் ரூ.12 என்ற விலையில் வெளிச்சந்தையில் விற்கப் பட்டது," என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.