மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சி: சாடும் அமைச்சர்

சென்னை: கடந்த 2019, 2020 ஆகிய ஆண்­டு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது தமி­ழ­கத்­தில் தற்­போது மின் நுகர்வு அதி­க­மாகி உள்­ள­தாக தமி­ழக மின்­சா­ரத்­துறை அமைச்­சர் செந்­தில் பாலாஜி தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும், மாநி­லம் முழு­வ­தும் மின் விநி­யோ­கம் எந்­த­வி­தத் தடங்­கலும் இன்­றிச் சீராக உள்­ள­தாக அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசுகை­யில் குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தில் மின்­வெட்டு நிலவு­வது போன்ற மாயத்­தோற்­றத்தை மக்­க­ளி­டையே சில தரப்­பி­னர் ஏற்­படுத்­து­வ­தாக அமைச்­சர் சாடி­னார்.

“மக்­க­ளுக்­குத் தடை­யற்ற மின்­சா­ரத்தை வழங்க அரசு அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுத்து வரு­கிறது.

“கடந்த இரு வாரங்­க­ளாக பல்­வேறு பகு­தி­களில் சூறா­வளி காற்று­டன் மழை பெய்­வ­தால் மின்­சார உள்­கட்­ட­மைப்­பில் மிகுந்­த­ சே­தம் ஏற்­பட்­டுள்­ளது. அவை உடனுக்­குடன் சரி­செய்­யப்­பட்­டுள்­ளன.

“இந்த நிதி­யாண்­டில் மறு­சீரமைக்­கப்­பட்ட மின் திட்­டத்­தின்­ கீழ் 26,300 விநி­யோக மின்­மாற்­றி­கள், 13 ஆயி­ரம் கிலோ மீட்­டர் நீள உயர் மின்­ன­ழுத்த மின்­பாதை, 3 ஆயி­ரம் கிலோ மீட்­டர் நீள தாழ்­வ­ழுத்த மின் பாதை­கள் நிறு­வப்­படும்.

“இத­னால் மின்­பா­தை­யில் ஏற்­படும் இழப்பு கணி­ச­மாக குறைக்­கப்­படும்,” என அமைச்­சர் செந்­தில் பாலாஜி கூறி­னார்.

தமி­ழ­கத்­துக்கு நாள்­தோ­றும் 72 ஆயி­ரம் மெட்­ரிக் டன் நிலக்­கரி தேவை உள்ள நிலை­யில், ஒன்­றிய அர­சால் 50 ஆயி­ரம் மெட்­ரிக் டன் மட்­டுமே ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு வந்­த­தா­கக் சுட்­டிக்­காட்­டிய அவர், தமி­ழக முதல்­வர் மத்­திய அரசை கடி­தம் மூலம் கேட்­டுக்­கொண்­ட­தன் விளை­வாக தற்­போது 57 ஆயி­ரம் மெட்­ரிக் டன் அள­வுக்கு நிலக்­கரி கிடைப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் தற்­போது 8.7 விழுக்காடு அள­வுக்கு மின் நுகர்வு அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், காற்­றாலை, சூரிய ஒளி­யின் மூலம் கிடைக்­கப் பெறும் மின்­சா­ரம் முழு­மை­யாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால், நிலக்­கரி பயன்­பாடு ஓர­ள­வுக்கு குறைக்­கப்­பட்­டுள்­ளது என்­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!