வழக்காடு மொழியாக தமிழ்: முதல்வர் வலியுறுத்து

வழக்காடு மொழியாக தமிழ்: முதல்வர் வலியுறுத்து

1 mins read
593e5900-65e1-45e5-aafd-bbb02b3fe9fb
-

சென்னை: தமி­ழ­கத்­தில் உச்­ச­நீ­தி­மன்ற கிளை அமைக்க வேண்­டும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் மீண்­டும் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இது தொடர்­பாக பிர­தமர் மோடிக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில், சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­காடு மொழி­யாக தமி­ழைப் பயன்­ப­டுத்­து­வது பொருத்­த­மா­ன­தாக இருக்­கும் என்­றும் உயர் நீதி­மன்­றத்­தில் தமிழை வழக்­காடு மொழி­யாக அறி­விக்க வேண்­டும் என்­றும் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

மேலும் உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி ரம­ணா­வுக்­கும் முதல்­வர் கடி­தம் எழு­தி­உள்­ளார்.

"உச்­ச­நீ­தி­மன்ற அமர்­வில் அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் விகி­தாச்­சார பிர­தி­நி­தித்­து­வம் அமைய வேண்­டும்.

"நீதி­ப­தி­களை நிய­மிப்­ப­தில் சமூ­கப் பன்­மு­கத்­தன்மை, சமூக நீதியைப் பேணும் வகை­யில் மாற்றம் தேவை," என முதல்­வர் தமது கடி­தத்­தில் வலி­யு­றுத்தி உள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

மேலும், நீதித்­து­றை­யில் கூட்­டாட்­சித்­தன்மை பிர­தி­ப­லிக்­கப்­பட உச்ச நீதி­மன்ற நிரந்­த­ரக் கிளை­களை நிறுவ வேண்­டும் என்­றும் சென்னை, கோல்­கத்தா, மும்பை, டெல்­லி­யில் உச்ச நீதி­மன்­றத்­தின் கிளை­களை அமைக்க வேண்­டும் என்­றும் தமி­ழக முதல்­வர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

அண்­மை­யில் நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி ரமணா, உள்­ளூர் மொழி­களை நீதி­மன்­றத்­தில் வழக்­காடு மொழி­யாக பயன்­ப­டுத்­து­வ­தற்­கான நேரம் வந்­து­விட்­டது என்று கருத்து தெரி­வித்­தி­ருந்­தார். இதற்­குப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் வர­வேற்பு தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில், உயர் நீதி­மன்­றத்­தில் தமிழை வழக்­காடு மொழி­யாக அறி­விக்­கக் கோரி முதல்­வர் ஸ்டா­லின் பிர­த­ம­ருக்­கு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.