நீலகிரி: குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் நள்ளிரவு வேளையில் கரடி சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
அண்மையில் கரடி ஒன்று அங்குள்ள வீட்டுக் கதவைத் தட்டும் காட்சி, அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது.
உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து கரடிகள் இவ்வாறு சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

