சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; சில பகுதிகளில் மக்கள் நிம்மதி, மகிழ்ச்சி தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

சென்னை: மாநி­லம் முழு­வ­தும் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் இன்று முதல் நான்கு நாள்­க­ளுக்கு பர­வ­லாக கன­மழை பெய்­யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்­னு­ரைத்­துள்­ளது.

வரும் 17ஆம் தேதி வரை கேரளா, லட்­சத்­தீவு, கும­ரிக்­க­டல் பகுதி, மன்­னார் வளை­குடா, இலங்கை கடற்­கரை, தென் மேற்கு வங்­கக்­க­டல் பகு­தி­களில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்­டர் வேகத்­தில் வீசக்­கூ­டும் என்­பதால் மீன­வர்­கள் கட­லுக்கு மீன் பிடிக்­கச் செல்­ல­வேண்­டாம் என­வும் எச்­ச­ரிக்கை விடுத்துள்ளது.

வட தமி­ழக உள் மாவட்­டங்­கள், கட­லோர மாவட்­டங்­களில் கன மழை பெய்வதற்­கான வாய்ப்பு அதி­கம் இருப்­ப­தா­க­வும் கூறி­யுள்­ளது.

இது­குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்­டுள்ள அறிக்­கை­யில், "இன்று 14ஆம் தேதி தமிழ்­நாடு, புதுவை, காரைக்­கால் பகு­தி­களைச் சேர்ந்த ெபரும்பாலான இடங்­களில் இடி மின்­ன­லு­டன் கூடிய மித­மான மழை பெய்­யக்­கூ­டும்.

"சேலம், தர்­ம­புரி, திருச்சி, தஞ்­சா­வூர், பெரம்­ப­லூர், நாமக்­கல், திரு­வா­ரூர், நாகப்­பட்­டி­னம், மயி­லா­டு­துறை, கட­லூர், விழுப்­பு­ரம், கள்­ளக்­கு­றிச்சி, திரு­வண்­ணா­மலை, காஞ்­சி­பு­ரம், கிருஷ்­ண­கிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்­களில் கன­ம­ழை­யும் பெய்ய வாய்ப்­புள்­ளது.

"நாளை 15ஆம் தேதியும் 16, 17ஆம் தேதி­களிலும் தமிழ்­நாடு, புதுவை, காரைக்­கால் பகு­தி­களில் பெரும்பாலான இடங்­களில் இடி மின்னலுடன் கூடிய கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ளது.

"சென்­னையைப் பொறுத்­த­வரை அடுத்த 24 மணி நேரத்­திற்கு வானம் மேக­மூட்­டத்­து­டன் காணப்­படும். நக­ரின் சில இடங்­களில் இடி மின்­ன­லு­டன் கூடிய லேசா­னது முதல் மித­மான மழை பெய்­யக்­கூ­டும்," என வானிலை மையம் தெரிவித்துள்ளதாக நியூஸ் 18 ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

இதற்­கி­டையே, கடந்த சில நாள்களாக கோடை வெயி­லின் தாக்­கத்தால் பெரும் அவதிப்பட்டு வந்த பொது­மக்­கள், இப்போது கன­மழை­யால் வெயி­லின் தாக்­கம் குறைந்து நிம்மதி அடைந்­துள்­ளனர்.

திரு­வண்­ணா­ம­லை­யி­லும் அதன் சுற்­று­வட்­டா­ரப் பகு­தி­க­ளிலும் கன­மழை பெய்­ததால் குளிர்ச்­சி­யான சூழல் நில­வியது. நீர்­நி­லை­களில் தண்­ணீர் மட்­டம் அதி­க­ரித்­த­தால் பொது­மக்­களும் விவ­சா­யி­களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்­யாறு, அதன் சுற்­று­வட்­டாரப் பகு­தி­களிலும் மித­மான சாரல் மழை பெய்து வருவதால், வெப்­பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

கிருஷ்­ண­கி­ரி­யில் குளிர்ந்த சாரல் காற்று வீசி­ய­தால், மலைப் பிர­தே­சங்­க­ளைப் போன்று மிக­வும் சில்­லென்ற பருவ நிலை நில­வி­யது.

மற்றொருபுறம், தர்­ம­புரி மாவட்­டத்­தில் தொடர்ந்து பெய்த சாரல் மழை­யால் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இத­னால் காலை­யில் பள்ளி, கல்­லுாரிக்குச் சென்ற மாண­வர்­கள், வேலைக்குச் சென்ற கூலி­யாட்­கள் கடும் அவ­திப்­பட்­ட­னர். மேலும், நேற்று மாலை வரை இதே­நிலை தொடர்ந்­த­தால், சாலை­யில் சென்ற வாகன ஓட்­டி­களும் பொது­மக்­களும் அவ­திக்கு ஆளா­கி­னர்.

இந்நிலையில், முன்­னெச்­ச­ரிக்­கை­யாக சென்னை விமான நிலை­யத்­தில் 17 உள்­நாட்டு விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­ட தாகவும் தகவல்கள் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!