கோவை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவுக்குச் செய்தி சேகரிப்பதற்காக வந்த பத்திரிகையாளர்களிடம் ரூ.500 பணத்துடன் கூடிய கோப்பு கள் வழங்கப்பட்டன. இதனால் அவர்கள் அதிருப்தி அைடந்தனர்.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகித்து 1,687 பேருக்கு பி.எச்டி., பட்டமும் முதுநிலை, இளநிலைப் பிரிவுகளில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களுக்கு பட்டத்துடன் தங்கப் பதக்கத்தையும் வழங்கினார்.
இந்நிலையில், விழாவில் செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்ட கோப்புகளில் ஓர் உறையில் ரூ.500 பணம் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்விலேயே இப்படியா என கேள்வி எழுந்துள்ளது.

