'2024 தேர்தலிலும் நானே பிரதமர் வேட்பாளர்'

'2024 தேர்தலிலும் நானே பிரதமர் வேட்பாளர்'

1 mins read
6a21b046-0911-4d4a-936f-59f6e8ff98f0
-

புதுடெல்லி: அடுத்த 2024 மக்களவைத் தேர்தலிலும் தானே பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நிற்கப் போவதாகவும் இனி எதிர்காலத்தில் ஓய்வென்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் பரூச் பகுதி மக்களிடையே, காணொளி வாயிலாகப் பிரதமர் உரை யாற்றியபோது, தம்மைச் சந்தித்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர், "இரு முறை பிரதமராக இருந்தாலே போதும். இதை விடவும் வேறு என்ன வேண்டும்?" என கேட்டார்.

"ஆனால், நான் முற்றிலும் ஒரு மாறுபட்ட மனிதன் என்பது அவருக்குத் தெரியவில்லை ேபாலும்," எனப் பிரதமர் கூறினார்.

"குஜராத் என்னை வடிவமைத்துள்ளது. அதனால்தான் எதேச்சையாக ஏதோ நடந்தது நடந்து விட்டது, இனி ஓய்வெடுக்க லாம் என நான் நினைக்க வில்லை. நலத்திட்டங்கள் 100% மக்களையும் சென்று அடைவதை உறுதி செய்யும் வரை ஓய்வெடுக்கமாட்டேன்," என்றும் பிரதமர் கூறினார்.

முன்பைவிட மேலும் உத்வேகத்துடன் பணியாற்றப் போவதாகக் கூறியுள்ள பிரதமர், அந்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை குறிப்பிடவில்லை.