இந்தி மொழித் திணிப்பு: ஆளுநர், அமைச்சர் காரசாரம்

இந்தி மொழித் திணிப்பு: ஆளுநர், அமைச்சர் காரசாரம்

2 mins read
75c13216-f405-417c-b1c7-868409f3c097
-

பொன்முடி: இந்தி படித்தவர்கள் பானிபூரி விற்றுக்கொண்டிருக்கிறார்கள்

சென்னை: "முன்பு இந்தி படித்­தால் வேலை கிடைக்­கும் என்­ற­னர். அப்­படி­யா­னால் கோவை­யில் பானி பூரி விற்­ப­வர்­கள் யார்?" என்­று தமிழக உயர் கல்­வித்­துறை அமைச்­சர் பொன்­முடி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை பார­தி­யார் பல்­கலைக்­க­ழகப் பட்­ட­ம­ளிப்பு விழா­வில் தமி­ழக ஆளு­நர் ஆர்.என்.ரவி­யும் அமைச்­சர் பொன்­மு­டி­யும் கலந்து கொண்­ட­னர். அப்­போது இந்தி மொழித் திணிப்பு தொடர்­பாக இரு­வ­ரும் கார­சா­ர­மாக தங்­கள் கருத்­து­க­ளைத் தெரி­வித்­த­னர்.

இந்­நி­கழ்­வில் பேசிய அமைச்­சர் பொன்­முடி, ஒரு­வர் தனிப்­பட்ட விருப்­பத்­தின் பேரில் எந்த மொழியை வேண்­டு­மா­னா­லும் கற்­க­லாம் என்­றார்.

இந்தி மொழித் திணிப்பை மட்­டுமே திமுக எதிர்க்­கிறது என்­றும் தமி­ழக அரசு எந்த மொழிக்­கும் எதி­ரா­னது அல்ல என்றும் அமைச்­சர் பொன்முடி தெளிவுபடுத்தினார்.

"மத்­திய அர­சின் புதிய கல்­விக் கொள்­கை­யில் உள்ள நல்ல திட்­டங்­க­ளைப் பின்­பற்ற நாங்­கள் தயார். தமிழ்­நாடு கல்­விக் கொள்­கையை நிறுவ முதல்­வர் ஒரு குழு அமைத்­துள்­ளார். தமி­ழ­கத்­தில் நில­வும் பிரச்­சி­னை­களை ஆளு­நர் புரிந்து கொள்­வார் என நம்­பு­கி­றேன்.

"இந்­தியை கட்­டா­ய­மாக்­கக்­கூ­டாது என்­பதை மட்­டுமே வலி­யு­றுத்­து­கி­றோம். மூன்­றா­வது மொழி­யாக எந்த மொழியை வேண்­டு­மா­னா­லும் படிக்­க­லாம்," என்­றார் அமைச்­சர் பொன்­முடி.

இதை­ய­டுத்து பேசிய ஆளு­நர் ஆர்.என்.ரவி, மத்­திய அரசு இந்தி மொழி­யைத் திணிக்­க­வில்லை என்­றார். எல்லா மொழி­களும் வளர ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"மத்­திய அர­சின் புதிய கல்விக்­கொள்கை தாய்­மொழிக் கல்­வியை ஊக்­கப்­ப­டுத்­து­கிறது. மாநில மொழி­க­ளி­லேயே பாடங்­கள் நடத்தப்­ப­டு­கின்­றன.

"தமிழ், சிறப்­பான உயர்ந்த மொழி. அந்­தந்த மாநில மொழி­க­ளில்­தான் நீதி­மன்ற வழக்­கா­டு­தல் நடை­பெற வேண்­டும் என பிர­த­மர் மோடி­யும்­கூட அண்­மை­யில் நீதி­பதி­கள் பங்­கேற்ற ஒரு கூட்­டத்­தில் பேசி இருக்­கின்­றார். ஆகவே இந்தி மொழி திணிக்­கப்­ப­டு­கின்­றது என்ற கேள்­விக்கே இட­மில்லை. இந்­தி­யா­வில் எல்லா மொழி­களும் வளர ஊக்­க­விக்­கப்­படும்," என்­றார் ஆளு­நர் ஆர்.என்.ரவி.

புதிய கல்­விக் கொள்­கை­யால் தமிழ்­மொழி பிற மாநி­லங்­களில் மூன்­றா­வது மொழி­யாக கற்­பிக்க வாய்ப்பு எற்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், பிற நாடு­களிலுள்ள பல்­க­லை­க்க­ழ­கங்­களில் தமிழ் இருக்கை அமைத்து இருப்­பதை போல, இந்­தி­யா­விலும் பிற பல்­கலைக்­க­ழ­கங்­க­ளில் இருக்கை அமைக்க தமி­ழக அரசு நட­வடிக்கை எடுக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார். இந்தி மொழி திணிப்பு குறித்த ஆளுநர், அமைச்சரின் பேச்சால் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பு நிலவுகிறது.