சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தம்மை உச்ச நீதிமன்றம் விடுவிக்க பேரறிவாளன் வலியுறுத்து

சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தம்மை உச்ச நீதிமன்றம் விடுவிக்க பேரறிவாளன் வலியுறுத்து

2 mins read
7f0998b3-3283-4d0b-b976-a051ce808500
பேரறிவாளன். படம்: ஊடகம் -

சென்னை: ராஜீவ் கொலை வழக்­கில் தண்­டனை பெற்று முப்­பது ஆண்­டு­க­ளாக சிறை­வா­சம் அனு­ப­வித்து வரும் பேர­றி­வா­ளன், உச்ச நீதி­மன்­றத்­துக்கு உள்ள சிறப்பு அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி தாம் விடு­விக்­கப்­பட வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளார்.

தம்மை விடு­விக்­கக் கோரி உச்ச நீதி­மன்­றத்­தில் பேர­றி­வா­ளன் தாக்­கல் செய்­துள்ள மேல் முறை­யீட்டு மனு மீதான விசா­ரணை முடி­வுக்கு வந்­துள்­ளது.

எந்த நேரத்­தி­லும் தீர்ப்பு வெளி­யா­க­லாம் என்று கரு­தப்­படும் நிலை­யில், பேர­றி­வா­ளன் தரப்­பும் மத்­திய அர­சும் எழுத்­து­பூர்வ வாதங்­களை நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்­ளன.

பேர­றி­வா­ளன் விடு­தலை விவ­கா­ரத்­தில் அதி­பர் தான் முடி­வெ­டுக்க முடி­யும் என்று மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

ஏற்­கெ­னவே கடந்த மார்ச் மாதம் உச்ச நீதி­மன்­றம் அவ­ருக்­குப் பிணை வழங்­கி­யுள்­ளது என்­றும் இதைத்­த­விர வேறு எந்த நிவா­ர­ண­மும் வழங்­கக்­கூ­டாது என்­றும் மத்­திய அரசு தனது வாதத்­தில் குறிப்­பிட்­டுள்­ளது.

"பேர­றி­வா­ளன் விவ­கா­ரத்­தில் குற்­றத்­தின் தீவிர தன்மை, ஆதா­ரங்­கள் உள்­ளிட்ட எதை­யுமே கருத்­தில் கொள்­ளா­மல் தமி­ழக அமைச்­ச­ரவை தீர்­மா­னம் நிறை­வேற்றி ஆளு­ந­ருக்கு அனுப்பி வைத்­துள்­ளது.

"என­வே­தான், ஆளு­நர் இந்த விவ­கா­ரம் தொடர்­பாக முடி­வெ­டுக்க அதி­ப­ருக்­குப் பரிந்­துரை செய்­துள்­ளார். இந்த வழக்கை விசா­ரித்­தது மத்­திய அர­சின் புல­னாய்வு அமைப்பு என்­ப­தால் இதில் மாநில அரசு முடி­வெ­டுக்க முடி­யாது. எனவே, பேர­றி­வா­ளன் மனுவை தள்­ளு­படி செய்ய வேண்­டும்," என மத்­திய அரசு வலி­யு­றுத்தி உள்­ளது.

கருணை மனுவை ஒவ்­வொரு முறை­யும் அதி­ப­ருக்கு அனுப்பி வைக்க வேண்­டு­மென்ற மத்­திய அர­சின் வாதத்தை ஏற்­றால், மாநில ஆளு­நர்­கள் இது­வரை கருணை மனுக்­கள் மீது எடுத்­துள்ள முடி­வு­கள் அர­சி­ய­ல­மைப்­புச் சாச­னத்­திற்கு முர­ணா­க­வும் செல்­லா­ம­லும் போகும் என பேர­றி­வா­ளன் தரப்பு தெரி­வித்­துள்­ளது.

"அமைச்­ச­ர­வை­யின் ஆலோ­ச­னை­யின் படியே ஆளு­நர் செய­லாற்ற வேண்­டும் என உச்ச நீதி­மன்­றத்­தின் அர­சி­யல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. இதன்­படி கருணை மனு மீதான முடி­வை­யும் அமைச்­ச­ர­வை­யின் பரிந்­து­ரை­யின் அடிப்­ப­டை­யி­லேயே ஆளு­நர் எடுக்க வேண்­டும்," என பேர­றி­வா­ளன் சார்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட எழுத்­து­பூர்வ வாதத்­தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.