ஊட்டியில் உள்ள அரசுப் பூங்காவில் 17ஆவது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியது. அங்கு மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு உருவங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. ஐம்பதாயிரம் ரோஜாக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மர வீடு, பொம்மைகள், பனி மனிதன் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் பார்த்து ரசித்துச் சென்றனர். இம்முறை அரசுப் பூங்காவில் 4,500 ரகங்களில் 40 ஆயிரம் ரோஜா செடிகள் பூத்துக் குலுங்குகின்றன. படம்: தகவல் ஊடகம்
மலர்களால் உருவான வீடு
1 mins read
-

