சென்னை: தொழில்துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு ஒன்று ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இந்தப் பயணம் 13 நாள்கள் நீடிக்கும் என்றும் அரசுக் குழுவில் உயர் அதிகாரிகள் பலர் இடம்பெற்றுள்ளனர் என்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தமிழக அரசுக் குழு, அந்நாடுகளில் உள்ள தொழில் நிறுவனப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

