சென்னை: தக்காளிக் காய்ச்சல் தொடர்பாக தேவையற்ற பயம் வேண்டாம் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தக்காளிக் காய்ச்சல் பரவி வருவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தக்காளிக் காய்ச்சல் என்பது நுண்கிருமியால் ஏற்படுவது என்பதால் அச்சம் தேவை இல்லை என்றார் ராதா கிருஷ்ணன்.

