புதுடெல்லி: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய பர்ஹான் தசீர் கான் என்ற 35 வயது நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், குஜராத், டெல்லி, பஞ்சாப், மும்பை, ஒடிசா, கர்நாடகா என பல பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடம் இவர் மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பாக தெற்கு டெல்லி டிசிபி பெனிதா மேரி கூறுகையில், "டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டர் இணையக் குற்றப் பிரிவு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அதில், jeevansathi.com என்ற திருமண வரன் பார்க்கும் இணைய தளத்தில் திருமணம் செய்துகொள்வதாக அறிமுகமான நபர் ஒருவர் தன்னிடம் அறிமுகமாகி தன்னிடம் பல முறை பணம் பெற்று ரூ.15 லட்சம் வரையில் மோசடி செய்துள்ளார் என மோசடி புகார் அளித்துள்ளார்.
"இவரது புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசார ணையில் சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டார்," என்றார்.

