நெல்லை கல்­கு­வாரி விபத்து: மூவர் மர­ணம்; இரு­வர் மீட்பு

2 mins read
f257e84a-34f7-44e0-b6fa-340bf84822a6
-

நெல்லை: நெல்லை அருகே கல்­கு­வா­ரி­யில் ராட்­சத பாறை­கள் உருண்டு விழுந்­த­தில், 300 அடி ஆழ பள்­ளத்­தில் நின்று கொண் டிருந்த ஆறு ஊழி­யர்­கள் விபத்­தில் சிக்­கிக்­கொண்­ட­னர்.

இந்த ஆறு பேரின் நிலை தெரி­யா­மல் அவர்­க­ளது உற­வி­னர்­கள் கலங்­கி­னர்.

இந்­நி­லை­யில், நேற்று காலை­யில் இரு­வர் மீட்­கப்­பட்ட நிலை­யில், மூன்று பேர் உயி­ரி­ழந்து விட்­ட­தாக காயங்­க­ளு­டன் மீட்­கப்­பட்ட ஊழி­யர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

நெல்லை மாவட்­டம், முன்­னீர்­பள்­ளம் கிரா­மத்­திற்கு அருகே உள்ள கல்­கு­வா­ரி­யில் உடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கற்­களை லாரி­கள் மூலம் எடுத்­துச்­செல்­லும் பணி­யில் ஊழி­யர்­கள் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது, சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு நேரத்­தில் எதிர்­பா­ரா­த­வி­த­மாக ராட்­சத பாறை­கள் சரிந்து விழுந்­த­தில், கல்­கு­வா­ரிக்கு கீேழ வேலை பார்த்த இரு லாரி ஓட்­டு­நர்­கள் உள்­பட ஆறு பேர் விபத்­தில் சிக்­கி­னர்.

ஒரு­வர் பாறை குவி­ய­லில் சிக்­கிக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும் அவ­ரது அழு­கு­ரல் தொடர்ந்து கேட்­டுக்­கொண்­டி­ருப்­ப­தா­க­வும் தக­வல்­கள் கூறின.

இரவு முழு­வ­தும் விட்­டு­விட்டு பெய்­து­வ­ரும் மழை­யால் 300 அடி பள்­ளத்­தில் சிக்­கி­ய­வர்­களை மீட்­கும் பணி­யில் தொய்வு ஏற்­பட்­டது. மழை­யின் கார­ண­மாக பள்­ளத்­தில் மண்­ச­ரிவு, கற்­கள் விழு­வ­தால் மீட்­புப்­ப­ணி­யில் தொய்வு ஏற்­பட்­ட­தாக மீட்­புப் பணி­யில் ஈடு­பட்ட தீய­ணைப்­புத்­து­றை­யி­னர் கூறி­னர்.

இச்­சம்­ப­வம் தொடர்­பில் கல்­கு­வாரி உரி­மம் பெற்ற சங்­கர நாரா­ய­ணன் என்­ப­வர் கைது செய்­யப்பட்­டுள்­ளார்.

மேலும், குத்­த­கை­யா­ளர் சேம்­பர் செல்­வ­ராஜ், அவ­ரது மகன் குமார் ஆகி­யோரை கைது செய்ய தனிப்­படை அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­பத்து குறித்து பிபிசி ஊட­கத்­துக்கு நெல்லை மாவட்ட ஆட்­சியா் விஷ்ணு அளித்த நேர்­கா­ண­லில், "நெல்லை மாவட்­டம், தருவை கிரா­மத்­தில் உள்ள தனி­யார் குவா­ரி­யில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்டு ஆறு தொழி­லா­ளர்­கள் சிக்­கி­னர். அதில் இரு­வர் உயி­ரு­டன் மீட்­கப் பட்டு உள்­ள­னர்.

"நால்­வரை மீட்­ப­தற்கு இந்­திய கடற்­ப­டை­யின் உதவி, தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யி­ன­ரின் உதவி கோரப்­பட்­டது. ஹெலி­காப்­ட­ரும் வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளது.

"அரக்­கோ­ணத்­தில் இருந்து 30 பேர் கொண்ட மீட்புப் படை­யி­னர் நெல்­லைக்கு விரைந்­துள்­ள­னர்.

"விபத்­தில் சிக்­கித் தவிக்­கும் ஆட­வ­ருக்கு திரவ உணவு கொடுக்­கப்­பட்டு வரு­கிறது.

"குவா­ரி­யில் விதி­மீ­றல் இருந்­தால் நிச்­ச­ய­மாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

"முத­லில் விபத்­தில் சிக்­கி­யுள்ள நபர்­களை மீட்க முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்டு வரு­கிறது," என்று தெரி­வித்­தார்.