புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கோடை வெயில் தகித்து வருகிறது. ெடல்லியின் பல பகுதிகளில் நேற்று 45 டிகிரி செல்சியசுக்கு ேமல் வெப்பம் பதிவானது.
ெடல்லி நகரில், கடந்த இரண்டு நாட்களாக கடும் வெயில் அடிக்கிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது. வடமேற்கு டெல்லியின் முகேஷ்புரியிலும் தென்மேற்கு டெல்லியின் நஜப்கரியிலும் அதிகபட்சமாக 47 டிகிரி வெப்பம் பதிவானது. அடுத்து வரும் நாள்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி தவிர பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களும் கடும் வெயிலில் சிக்கித் தவித்து வருகின்றன.
டெல்லியில் வெயில் சுட்டெரிப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் கேரளாவில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கடும் வெயில் காரணமாக யமுனை ஆறு வறண்டு கிடப்பதாலும் ஹரியானா மாநிலத்துக்கு அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்காததாலும் டெல்லியின் பல பகுதிகளில் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய முடியவில்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடா்பாக பெயா் கூற விரும்பாத அதிகாரி ஒருவா் கூறுகையில், "நாங்கள் தண்ணீா் விநியோகம் குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருப்பினும், ஹரியானா அரசு யமுனை ஆற்றில் கூடுதல் தண்ணீரை விடவில்லை எனில் நிலைமை மோசமாகிவிடும்," என்றார்.

