டெல்லி தீ விபத்து: உற­வி­னர்­க­ளைக் கண்­ணீ­ரு­டன் தேடி அலை­யும் குடும்­பத்­தி­னர் உயி­ரைப் பண­யம் வைத்து பல­ரைக் காத்த நாய­கன்­கள்

டெல்லி தீ விபத்து: உற­வி­னர்­க­ளைக் கண்­ணீ­ரு­டன் தேடி அலை­யும் குடும்­பத்­தி­னர் உயி­ரைப் பண­யம் வைத்து பல­ரைக் காத்த நாய­கன்­கள்

3 mins read
e6e669d1-422d-453a-9cd5-4db876c6f4a9
பல­ரது உயி­ரைக் காப்­பாற்­றிய பின்­னரே தாங்­களும் உயிர் தப்­பி­ய­தாக கூறி­யுள்ள மம்தா தேவி, அவி­னாஷ், வினீத். படம்: இந்­தியா டுடே -

புது­டெல்லி: டெல்­லி­யில் நான்கு மாடி வணிக வளா­கக் கட்­ட­டத்­தில் மூண்ட தீயில் கருகி 27 பேர் உயி ரிழந்­த­தா­கக் கூறப்­பட்ட நிலை­யில், இப்­போது பலி எண்­ணிக்கை 30 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

வெள்­ளி­யன்று மாலை இச்­சம்­வம் நடந்­தது முதல், தலை­ம­றை­வாகி விட்ட வணிக வளா­கக் கட்­ட­டத்­தின் உரி­மை­யா­ளர் மணிஷ் லக்­ராவை டெல்லி காவல்­து­றை­யி­னர் நேற்று கைது செய்­த­னர்.

வணிக வளா­கத்தை பாது­காப்பு இல்­லாத வகை­யில் கட்­டி­ய­தற்­காக அவர் கைது செய்­யப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், தீவி­பத்­தின் போது, தங்­க­ளது உயிரை துச்­ச­மாக மதித்து பல­ரது உயி­ரைக் காப்­பாற்­றி­யுள்ள மூவரை 'உண்­மை­யான நாய­கன்­கள்' என வர்­ணித்து ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்டு உள்­ளன.

வணிக வளா­கத்­தில் உள்ள தொழிற்­சா­லை­யில் பணி­பு­ரிந்து வந்த மம்தா தேவி, 52, என்­ப­வர் தீ விபத்து பற்றி கூறி­ய­போது, "தீ விபத்து ஏற்­பட்­ட­வு­டன் ஒரே கூச்­ச­லாக இருந்­தது. மக்­கள் தங்­க­ளைக் காப்­பாற்­றிக்­கொள்ள தப்­பி­யோ­டி­னர். அறை­யின் வெப்­ப­நிலை திடீ­ரென உயர்ந்த நிலை­யில், பல­ரும் மயங்கி விழுந்­த­னர்.

"சற்று நேரத்­தில், பாரந்­தூக்­கி­யில் மீட்­புக் குழு­வி­னர் வந்­த­னர். சன்­னல் கண்­ணா­டி­கள் உடைக்­கப்­பட்டு மீட்­புப் பணி­கள் நடந்­தன. என்­னைக் காப்­பாற்­றிக் கொள்­வ­தற்கு முன்பு அங்­கி­ருந்த சிறு­மி­க­ளின் உயி­ரைக் காப்­பாற்ற நினைத்­தேன். அவர்­களை முத­லில் கயிறு வழியே கீழே இறக்­கி­விட்­டேன். வேறு யாரும் அங்­கில்லை என்­பதை உறுதி செய்­த­பின்­னரே கடை­சி­யாக நான் கீழே இறங்­கிே­னன்," என்­றார்.

இது­போன்று ஆறு சிறு­மி­களை அவர் காப்­பாற்றி உள்­ளார்.

இதே­போன்று அதே தொழிற் சாலை­யில் கடந்த ஓராண்­டா­கப் பணி­யாற்றி வரும் அவி­னாஷ், 27, கூறும்­போது, "சன்­னலை உடைத்து பெண்­கள், குழந்­தை­க­ளைப் பாரந்­தூக்கி வழியே கீழே கொண்டு செல்ல உத­வி­னேன். திடீ­ரென அறை­யின் வெப்­ப­நிலை அதி­க­ரித்து, புகை பர­வத் தொடங்­கி­யது. அதன்­பின்­னர் மேசை, நாற்­கா­லி­கள் உத­வி­யு­டன் சன்­னலை உடைத்­தோம். எங்­களை முத­லில் போக­வி­டுங்­கள், வீட்­டில் குழந்­தை­கள் இருக்­கி­றார்­கள். எங்­க­ளது வீட்­டில் வேலை பார்க்­கும் ஒரே நபர் தாங்­கள்­தான் என்று சில பெண்­கள் கூறி­னர். இது­போன்ற சூழ­லில், பெண்­கள், குழந்­தை­கள் அனை­வ­ரை­யும் முத­லில் காப்­பாற்ற வேண்­டும் என நினைத்து அதற்­கேற்ப செயல்­பட்­டேன்," என்­றார்.

அறை­யில் வெப்­பம் அதி­க­ரித்து சிலர் உயி­ரி­ழந்து கிடந்­த­னர். அவர்­க­ளு­டன் வேறு சில­ரும் மயங்கி விழுந்­த­னர். அவர்­களை வினீத் குமார் என்­ப­வர் காப்­பாற்றி உள்­ளார்.

வினீத் கூறும்­போது, "எரிந்து கொண்­டி­ருந்த கட்­ட­டத்­தில் நடந்த காட்­சி­க­ளைப் பார்க்­கும்­போது மனது வலித்­தது. பலர் சுய­நி­னை­வற்று தரை­யில் கிடந்­த­னர். சிலர் தங்­க­ளைக் காப்­பாற்­றிக் கொள்ள மாடிப்­ப­டி­களில் ஏறி ஓடி­னர்.

"சுய­நி­னை­வற்று, மயங்­கிக் கிடந்­த­வர்­க­ளைக் காப்­பாற்ற வேண்­டும் என்ற உணர்வு எனக்கு ஏற்­பட்­டது. இத­னால், மற்­ற­வர்­க­ளின் உத­வி­யு­டன் 12க்கும் மேற்­பட்­டோ­ரைக் காப்­பாற்­றி­னேன்," என்­றார் வினீத்.

"அந்­தப் பகு­தி­யில் இருந்து உடனே தப்பி ஓடி­விட நினைத்­தேன். ஆனால், தீயின் பிடி­யில் சிக்­கிக்­கொண்டு அல­றிய மக்­களை அப்­ப­டியே விட்­டு­விட்­டுச் செல்ல மன­மில்லை. நிலக்­கரி அடுப்­பின் மீது நிற்­ப­து­போல் உணர்ந்­தேன்," என வினீத் கூறி­யுள்­ளார்.

தங்­க­ளது உற­வி­னர்­களை கண் ணீரு­டன் இன்­னும் தேடி அலைந்து வரு­கின்­ற­னர் குடும்­பத்­தி­னர்.