செய்­திக்­கொத்து

செய்­திக்­கொத்து

3 mins read
3f118edd-6e86-47d7-9e37-6f5572494493
-

ஆறு லட்­சம் மாண­வர்­க­ளுக்கு

இல­வச மிதி­வண்­டி­கள் விநிேயா­கம்

சென்னை: அரசு மற்­றும் அரசு உதவி பெறும் பள்­ளி­களில் 11ஆம் வகுப்­பில் படித்­து­வ­ரும் ஏறக்­கு­றைய ஆறு லட்­சம் மாணவ மாண­வி­க­ளுக்கு இல­வ­ச­மாக மிதி­வண்­டி­கள் வழங்­கப்­படும் என தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

618,101 மிதி­வண்­டி­க­ளுக்­கான விலையை இறுதி செய்­யும் பணி­கள் நடைெபற்று வரு­வ­தா­க­வும் மூன்று மாதங்­க­ளுக்­குள் மிதி­வண்­டி­கள் வழங்­கப்­பட உள்­ள­தா­க­வும் தக­வல்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.

சென்­னை­யில் உலக மக­ளிர்

டென்­னிஸ் போட்­டி­கள்

சென்னை: இந்­தி­யா­வில் முதல்­மு­றை­யாக சென்­னை­யில் உலக மக­ளிர் டென்­னிஸ் போட்­டி­கள் நடத்­தப்­பட உள்­ளன. பெண்­கள் டென்­னிஸ் சங்­கம் சார்­பில் நடத்­தப்­பட உள்ள இந்­தப் போட்­டி­கள் சென்னை நுங்­கம்­பாக்­கத்­தில் செப்­டம்­பர் 26 முதல் அக்­டோ­பர் 2ஆம் ேததி வரை நடை­பெற உள்­ள­தாக விளை­யாட்­டுத் துறை அமைச்­சர் ெமய்­ய­நா­தன் அறி­வித்­துள்­ளார். இப்­போட்­டியை நடத்­து­வ­தற்கு முதல்­கட்­ட­மாக ரூ.5 கோடி நிதியை தமி­ழக அரசு ஒதுக்கி உள்­ள­தா­க­வும் அமைச்­சர் மேலும் கூறி­யுள்­ளார்.

நடத்­து­நர் உயி­ரி­ழப்பு; பயணி கைது

மேல்­ம­ரு­வத்­தூர்: மேல்­ம­ரு­வத்­தூ­ரில் அர­சுப் பேருந்­தின்

நடத்­து­நரை அடித்­துக் கொன்ற பயணி கைது

செய்­யப்­பட்­டார். விழுப்­பு­ரத்­துக்கு சென்­று­கொண்­டி­ருந்த பேருந்­தில் மது­போ­தை­யு­டன் பயணி ஒரு­வர் ஏறி­யுள்­ளார். அவ­ரி­டம், டிக்­கெட் எடுக்­கும்­படி நடத்­து­நர் பெரு­மாள் கூறி­யுள்­ளார். மது­போ­தை­யு­டன் இருந்த ஆட­வர், அதெல்­லாம் முடி­யாது என வாக்­கு­வா­தம் செய்­துள்­ளார். இந்த வாக்­கு­வா­தம் முற்றி கைக­லப்­பாக மாறிய நிலை­யில், நடத்­து­நர் கொல்­லப்­பட்­டார். நடத்­து­நர் குடும்­பத்­துக்கு ரூ.10 லட்­சம் இழப்­பீடு வழங்­கப்­படும் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார். பேருந்­தி­லேயே நடத்­து­நர் கொல்­லப்­படும் வகை­யில் சட்­டம் ஒழுங்கு தமி­ழ­கத்­தில் பாழ்­பட்டு கிடப்­ப­தாக

அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம் தனது கண்­ட­னத்­தைத் தெரி­வித்­துள்­ளார்.

மிகப்­பெ­ரிய பானை,

அணி­க­லன்­கள் கண்­டு­பி­டிப்பு

கீழடி: சிவ­கங்கை மாவட்­டம், கீழ­டி­யில் நடை­பெற்று வரும் எட்­டாம் கட்ட அக­ழாய்­வில் மிகப்­பெ­ரிய இரண்டு பானை­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. சுவர் பகு­தி­யோடு இணைந்­தி­ருக்­கும் பானை­களை முழு­மை­யாக மீட்­க­வும் நட­வ­டிக்­கை­ எடுக்­கப்­பட்டு வரு­கிறது. அதேேபால், வெம்­பக்­கோட்டை அக­ழாய்­வில் யானை­யின் தந்­தத்­தால் செய்­யப்­பட்ட

அணி­க­லன்­களும் டெர­கோட்டா களி­மண்­ணால் செய்­யப்­பட்ட அணி­க­லன்­கள் பாக­மும் கிடைத்­தி­ருப்­ப­தாக தொழில்­துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு ெதரி­வித்­துள்­ளார்.

ஒடி­சா­வில் 30% மாண­வர்­கள்

பள்­ளிக்கு வர­வில்லை

புவ­னேஷ்­வர்: ஒடி­சா­வில் கொரோனா தொற்று பாதிப்­புக்­குப் பிறகு 30 விழுக்­காடு மாண­வர்­கள் பள்­ளி­க­ளுக்கு வர­வில்லை என இம்­மா­நில அரசு வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரம் குறிப்­பிட்­டுள்­ளது. பள்­ளிக்கு வராத மாண­வர்­க­ளின் வீடு­க­ளுக்கு ஆசி­ரி­யர்­களை அனுப்பி, அவர்­கள் பள்­ளிக்கு வரா­த­தற்­கான கார­ணத்தை அறிந்து வர­வும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அரசு அளிக்­கும் இல­வச பள்­ளிச் சீருடை, புத்­த­கம், மதிய உணவு போன்ற திட்­டங்­களை மாண­வர்­க­ளுக்கு எடுத்­துக் கூறி, அவா்களை மீண்­டும் பள்­ளிக்கு வர வைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வும் மாவட்ட நிர்­வா­கங்­க­ளுக்கு முதல்­வர் நவீன் பட்­நாய்க் அறி­வு­றுத்தி உள்­ளார்.

கழு­தைப் பால் தயா­ரிப்பு;

சீனா­வுக்கு ஏற்­று­மதி

திரு­நெல்­வேலி: தமி­ழ­கத்­தின் முதல் கழு­தைப் பண்­ணையை நெல்லை மாவட்ட ஆட்­சி­யர் விஷ்ணு திறந்து வைத்­தார்.

திரு­நெல்­வேலி மாவட்­டம், முக்­கூ­டல் அருகே 100 கழு­தை­க­ளு­டன் கழு­தைப் பால் பண்­ணையை அமைத்­துள்­ள­னர் திரு­நெல்­வேலி பட்­ட­தாரி இளை­ஞர்­கள். வெளி­நா­டு­களில் கழு­தைப் பால் நல்ல விலைக்கு விற்­கப்­ப­டு­வ­தால் இதனை சீனா போன்ற நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­ய­வும் திட்­ட­மிட்­டுள்­ள­னர். ஒரு லிட்­டர் பாலின் விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை விற்­ப­னை­யா­கிறது. 50 மில்லி கழு­தைப்­பால் ரூ.500க்கு விற்­கப்­ப­டு­கிறது.